Connect with us
lokesh kanagaraj

Cinema News

லோகேஷ் பாக்ஸிங் கத்துகிட்டதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?… பலே ஆளுதான் போலயே

Diector Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் பெரிய மாஸ் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். அறிமுகமான சில வருடங்களிலேயே இவர் தனக்கென தனி பெயரை சம்பாதித்து கொண்டு இன்று முன்னணி இயக்குனராகவும் உள்ளார்.

இவர் மேலும் கைதி, மாஸ்டர் போன்ற பல திரைப்படங்களையும் இயக்கினார். இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியை சம்பாதித்து கொடுத்தன. உலகநாயகன் கமல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்தான் விக்ரம். இப்படம் இவருக்கு ஒரு இமாலய சாதனையை படைத்தது என கூறலாம். இப்படத்திற்கு பின் லோகேஷின் புகழ் உச்சத்தை எட்டியது. இவர் மேலும் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தையும் இயக்கவுள்ளார்.

இதையும் வாசிங்க:‘லியோ’ பட ரிலீஸ் நேரத்தில் லோகேஷ் எடுத்த தில்லான முடிவு! இனிமேலாவது அடங்குவாங்களானு பார்ப்போம்

இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் சில காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டன. அப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படபிடிப்பின் போது சில நேரங்களில் பாக்ஸிங் கற்று கொண்டுள்ளார். இது ஏதோ பொழுதுபோக்கிற்கு கற்று கொண்டார் என நினைத்தால் இதற்கு பின் ஒரு காரணமும் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் வாசிங்க:ஏற்கனவே ஆடிய ஆட்டம் போதாதா? மீண்டும் அஜித்துடன் மல்லுக்கு நிக்கும் அந்த நடிகர் – வேகமெடுக்கும் ‘விடாமுயற்சி’

லியோ திரைப்படத்தில் சண்டை மாஸ்டராக பணியாற்றியவர்கள்தான் இரட்டையர்களான அன்பறிவு மாஸ்டர்கள். இவர்கள் இருவரும் இணைந்து படம் இயக்க போவதாகவும் அதில் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

அப்படத்தில் லோகேஷ் கனகராஜ் பாக்ஸராக வரபோவதாகவும் அதனால்தான் அன்பறிவு மாஸ்டர்கள் அவருக்கு லியோ படத்தின் படபிடிப்பின் போது பாக்ஸிங் சொல்லி கொடுத்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனராய் வலம் வரும் லோகேஷ் படங்களில் நடிப்பார் எனும் செய்தி தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்படம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. லியோ பட ரிலீஸுக்கு பின் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் வாசிங்க:‘லியோ’ படத்தில் முதல் 10 நிமிடம்! கடைசி 7 நிமிடம் – யார் வராங்க தெரியுமா? ஹைப்பை ஏற்படுத்தும் லோகிபாய்

google news
Continue Reading

More in Cinema News

To Top