லோகேஷுக்கு இந்த நிலைமையா?.. இந்தியன் 2 படத்தால் வந்த சிக்கல்?..
தமிழ் சினிமாவில் சென்ஷேசனல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போர்ஷனையும் முடித்து விட்டு சென்னைக்கு பேக் அப் செய்து வருகிறார் லோகேஷ். லியோ படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை திணற வைத்தது. மேலும் படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க விஜயும் அஜித்தும் மீண்டும் மோதுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஏகே 62 படத்தின் சில பல பிரச்சினைகளால் கண்டிப்பாக அஜித் லியோ படத்தோடு மோத மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது. ஆகவே விஜயின் லியோ படம் இந்த முறை சோலோவாக களம் இறங்கும் என நினைத்துக் கொண்டிருக்க,
சத்தமே இல்லாமல் ஆட்ட நாயகனாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் கமல். அவரின் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் ‘இந்தியன் 2’ படம் தீபாவளியா ? பொங்கலா? என குழம்பி போக , உலகம் முழுவதும் தீபாவளி அன்று தான் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என சொல்ல தீபாவளி அன்றே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.
பொங்கல் அன்று ஏற்கெனவே சங்கர் இயக்கும் ராம்சரண் படமும் பிரபாஸ் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் புதிய படமும் வெளியாகும் நிலையில் அந்த இரண்டு பேன் இந்தியா படங்களோடு இந்தியன் 2 படம் நிச்சயமாக மோதாது என்று சொல்கிறார்கள்.
இதையும் படிங்க : கால்ஷீட் கொடுக்காத ரஜினி.. கடுப்பான தயாரிப்பாளர்!.. பார்த்திபன் ஹீரோ ஆனது இப்படித்தான்!..
ஆகவே தீபாவளி அன்றே படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறதாம். இந்த நிலையில் கமலை தன் குருவாக எண்ணும் லோகேஷ் எப்படி நேருக்கு நேராக மோதுவார் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.