லோகி என்னய்யா பண்ணி வச்சிருக்க… லியோ படத்தை பார்த்து ஷாக்கான விஜய்… அடடே!

0
1029

Lokesh Leo: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் வேலைகள் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தினை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தினை போட்டுக்காட்டும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் அவரின் அடுத்த படமாக உருவாகி இருப்பது தான் லியோ. இப்படத்தில் விஜய், த்ரிஷா இணைந்து நடித்து இருக்கின்றனர். இப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என வில்லன்களை பலரகமாக இறக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆடியோ ரிலீஸில் நம்ம பவர் தெரியணும்… ஆனா பீதியாவும் இருக்கே.. கலவரத்தில் இருக்கும் தளபதி கூடாரம்!

எப்போதும் போல இதுவும் ஆக்‌ஷன் படமாக தான் இருக்கும் என்றே கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். வெறும் இரண்டு பாடல்களே கொண்ட இப்படத்தில் மட்டும் 35 பிஜிஎம் போடப்பட்டு இருக்கிறதாம். இதனால் இருக்கும் எல்லா கதாபாத்திரங்களுக்குமே மாஸ் எண்ட்ரி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் சிங்கிள் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாக இருக்கிறது. மேலும், இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 30ந் தேதி நடக்க இருக்கிறது. இதில் விஜய் என்ன பேசுவார்? எதுவும் சர்ச்சையாகும் எனப் பலரும் கண் கொத்தி பாம்பாக காத்திருகின்றனர்.

இதையும் படிங்க: சூர்யாவுடன் நடிக்க தயக்கம் காட்டும் பொறுப்புள்ள நடிகர்! என்ன மக்கா பழச எல்லாம் மறந்துட்டீங்களா?

இதே நேரத்தில் லியோ படத்தினை படக்குழு முழுதாக பார்த்து விட்டனர். அதிலும் படத்தினை பார்த்த விஜயிற்கு ரொம்பவே சந்தோஷம் தாங்கவில்லையாம். படம் சூப்பரா பண்ணிருக்கப்பா என லோகேஷை பாராட்டி இருக்கிறார்.

லியோ படத்தின் முன்வசூலே 450 கோடியை தாண்டிய நிலையில் 1000 கோடி வசூலை அள்ள வேண்டும் என பலரும் காத்திருக்க சிலர் ப்ளாப் ஆகணும் என வேண்டுதல் வைக்காத குறையாக வெயிட் செய்து வருகின்றனர். என்ன நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம்.

google news