அடுத்த படம் அண்ணா கூட பண்ணுனா சந்தோஷம்தான் - தளபதி பற்றி கூறிய லோகேஷ்
தற்சமயம் தமிழ் சினிமாவில் குறைந்த நாட்களிலேயே வளர்ந்து வந்த ஒரு முக்கியமான இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.
என்னதான் மாநகரம் அவரது முதல் படமாக இருந்தாலும் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு படங்களே லோகேஷ் கனகராஜ் பெயரை தமிழக மக்களிடம் கொண்டு சென்றது.
மேலும் வரிசையாக பெரிய கதாநாயகர்களை வைத்து படம் இயக்கி வருகிறார் லோகேஷ். இவ்வளவு குறுகிய காலத்தில் பெரிய ஹீரோக்களை வைத்து வரிசையாக படம் இயக்கியவர் லோகேஷ் மட்டுமே.
பேட்டி ஒன்றில் லேகேஷிடம் விஜய்யுடன் பணிப்புரிந்தது உங்களுக்கு எப்படியான அனுபவமாக இருந்தது? என கேட்டனர்
அதற்கு லோகேஷ் “விஜய் அண்ணாவுடன் மாஸ்டர் இயக்கிய நாட்கள் மறக்க முடியாதது. இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தும் எப்படி இவ்வளவு அடக்கமாக, ஜாலியாக இருக்கிறார் என தெரியவில்லை? அடுத்து இன்னொரு படம் அண்ணாக்கூட இயக்க வாய்ப்பு கிடைத்தாலும் மகிழ்ச்சிதான்” என கூறியுள்ளார்.
இதனால் லோகேஷ் மற்றும் தளபதி காம்போவில் மீண்டும் படம் வருமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.