கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்த லோகேஷ்!.. தயாராகும் ரஜினி!. கேப்பு விடாம அடிக்குறாங்களாம்!..

ஜெயிலர் படம் கொடுத்த மெகா வெற்றி ரஜினியை உற்சாகப்படுத்தி இருக்கிறது. வழக்கமாக வருடத்திற்கு ஒரு படம் நடிக்கும், ரஜினி ஜெயிலர் வெற்றிக்கு பின் மளமளவென படங்களை புக் செய்தார். மகள் இயக்கத்தில் லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன். அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என அறிவிப்புகள் வெளியானது.

இதில் லால் சலாம் படம் வெளியாகி ரசிகர்களை கவரவில்லை. இந்த படத்தில் ரஜினிக்கு கெஸ்ட் ரோல்தான். எனவே, அவர் கவலைப்படவில்லை. ஆனாலும், மகளுக்கு இப்படம் வெற்றியாக அமையவில்லை என்பதில் மட்டும் வருத்தம் இருக்கிறது. அதை காட்டிக்கொள்ளாமல் வேட்டையன் படத்தில் நடிக்க போனார்.

இதையும் படிங்க: எனக்கு அந்த நடிகரோட சம்பளம் வேணும்!.. மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய சிம்பு!. விளங்குன மாதிரிதான்!.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஒரு பக்கா ஆக்‌ஷன் படம் என சொல்லப்படுகிறது. துஷரா விஜயன், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா என பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், நாகர்கோவில், கன்னியாகுமாரி மற்றும் கேரளா என பல இடங்களிலும் நடந்தது.

இப்படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்படத்திற்கான டப்பிங் வருகிற 8ம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில், லோகேஷ் அடுத்து இயக்கவுள்ள கூலி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 5ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவிருக்கிறது.

இதையும் படிங்க: ஷாலினிக்கு ஆபரேஷன்!.. அஜர்பைசானில் அஜித்!.. விடாமுயற்சிக்காக வேலை பார்க்கும் ஏ.கே!..

5ம் தேதி துவங்கும் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடக்கவிருக்கிறதாம். இதற்கு இடையே 8ம் தேதி ரஜினி சென்னை வந்து வேட்டையன் படத்தின் டப்பிங் பேசிவிட்டு பின் மீண்டும் ஹைதராபாத் சென்று கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம் மொபைல் டப்பிங் தியேட்டர் வந்துவிட்டது.

வேன் போன்ற வாகனத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் டப்பிங் பேசிக்கொள்ளலாம். ஒருவேளை ஹைதராபாத்தில் இருந்தவாறே ரஜினி இதை பயன்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

 

Related Articles

Next Story