ஆமா லோகேஷ் ஸ்டைல் கோட்டில் இருக்கு.. வெங்கட் பிரபு சொன்ன உண்மை..

by Akhilan |
ஆமா லோகேஷ் ஸ்டைல் கோட்டில் இருக்கு.. வெங்கட் பிரபு சொன்ன உண்மை..
X

#image_title

Venkat Prabhu: இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் ஒரு விஷயத்தினை செய்து இருப்பதாக இயக்குனரே சொல்லி இருக்கும் தகவல் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். விரைவில் தன்னுடைய அரசியல் பணியில் முழுமையாக ஈடுபட போகும் தளபதியின் சினிமா காரியரில் கடைசி சில படங்கள் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!

இப்படத்தின் திரைக்கதையில் ரசிகர்களுக்கு பெரிய அளவு நம்பிக்கை இருப்பதால் படம் கண்டிப்பாக பிளக்போஸ்டராக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்படத்தின் மிக முக்கிய எதிர்பார்ப்பாக இருந்த ஒரு விஷயம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதுதான் யுவனின் இசை.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் சந்தோஷமடைந்தனர். ஆனால் முதல் பாடல் அவர்கள் எதிர்பார்ப்பை சற்று குறைத்தது. ஆனால் அதை தொடர்ந்து வெளிவந்த இரண்டு சிங்கிளுமே ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு அமையவே இல்லை.

ஏனெனில், விஜய் திரைப்படங்களில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுவது பாடல்கள் தான். அதுவே படத்திற்கான நல்ல அடித்தளமாக அமையும். ஆனால் கோட் திரைப்படத்தின் சிங்கிள் பிரச்னையை தான் விலை கொடுத்து வாங்கியது. இதில் நேற்று வெளியான மட்ட திரைப்படம் மட்டுமே கொஞ்சம் பரவாயில்லை ரகம் என்ற லிஸ்ட்டில் இருக்கிறது.

இதையும் படிங்க: போட்டிக்கு வர்ற கங்குவா படத்தைப் பற்றி ரஜினி என்ன நினைப்பாரு? வேற லெவல் திங்கிங்..!

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில், இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒன்று ரீமேக் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். இப்படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாட வேண்டும் என கூட்டணி விரும்பியது. ஆனால் அவரின் நேர்மின்மையால் இந்த ரீமிக்ஸ் விஷயம் நடந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

ilayaraja

ரெட்ரோ பாடல்களை புது படத்தில் இணைப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டெக்னிக் தான். அதை அவர் தன்னுடைய எல்லா திரைப்படங்களிலும் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் முதல்முறையாக வெங்கட் பிரபுவும் தன்னுடைய படத்தில் ரெட்ரோ பாடலை பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story