அம்மாவின் குரலுக்காக ஏங்கும் ஸ்ரீ.. விடாமல் முயற்சி செய்யும் லோகேஷ்

sri_new (1)
Actor Sri: மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இறுகப்பற்று, வில் அம்பு போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஸ்ரீ. சமீபகாலமாக இவரை பற்றிய செய்திதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே ஸ்ரீயை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதுவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ மூலமாகத்தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஒரு வருடமாக ஸ்ரீயின் பதிவுகளை பார்க்கும் பொழுது அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.
சிலபேர் அவர் ஆல்கஹால் அதிகமாக உட்கொண்டு வருவதாகவும் மன அழுத்தத்திற்கு அவர் மிகவும் ஆளாகி இருப்பதாகவும் பல சர்ச்சைகள் அவரைப் பற்றி வந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் அவருடைய தோழி ஒருவர் ஸ்ரீயை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ஸ்ரீயை நெருங்கி விட்டோம். கூடிய சீக்கிரம் அவரை கண்டுபிடித்து அவரை சுற்றி நடக்கும் இந்த பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்க வழிவகை செய்வோம் என்றெல்லாம் அவருடைய தோழி கூறி வந்தார்.
இன்னொரு பக்கம் இறுகப்பற்று படத்திலும் வில் அம்பு படத்திலும் தனக்கான சம்பளம் வரவில்லை என்பதால் அதன் காரணமாகவே தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ஸ்ரீ என்றும் கூறப்பட்டு வந்தது. இதில் வில்லம்பு படத்தில் ஸ்ரீ உடன் நடித்த நடிகை சாந்தினி கூறும் பொழுது சாந்தினிக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைத்துவிட்டது என்று கூறினார். ஆனால் ஸ்ரீக்குரிய சம்பளம் கிடைத்ததா இல்லையா என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவரை இதுவரை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. சிலபேர் வெளிமாநிலங்களில் இருப்பதாகவும் சில பேர் யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்று விட்டதாகவும் கூறி வருகிறார்கள். ஆனால் ஸ்ரீ செய்துவரும் ஒரே ஒரு செயல் அவருடைய அம்மாவுக்கு நாள்தோறும் தொலைபேசி வாயிலாக அழைக்கிறாராம். அவருடைய அம்மா குரலை கேட்டதும் கட் பண்ணி விடுகிறார்.

ஏற்கனவே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது வீட்டை விட்டு பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்று வந்த ஒரு வாரத்திலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் ஸ்ரீ. குடும்பத்தின் மீதும் குடும்ப உறுப்பினர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் அன்பு கொண்டவராகவும் தான் இருந்திருக்கிறார். அப்படி இருப்பவர் இந்த நிலைமைக்கு ஆளானது பல பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்னும் சிலர் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவையும் லோகேஷ் கனகராஜையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எஸ் ஆர் பிரபுவால்தான் இந்த நிலைமைக்கு ஆளானார் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் ஸ்ரீயின் தங்கை திருமணத்திற்கு 5 லட்சம் கொடுத்ததே எஸ் ஆர் பிரபு தான். அதேசமயம் லோகேஷும் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து ஸ்ரீயை தொடர்பு கொண்டு வருகிறாராம். ஆனால் லோகேஷின் போனை ஸ்ரீ இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.