Connect with us

Cinema News

தளபதி விஜய் நடிப்பில் கில்லி -2 வருமா.? லோகேஷின் பதிலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனைகளை புரிந்து வருகிறது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து அவரது 67வது திரைப் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்தடுத்த படங்கள் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது கமல்ஹாசனின் விக்ரம் பட கதாபாத்திரத்தை மீண்டும் மறுஉருவாக்கம் செய்து அண்மையில் விக்ரம் படம் உருவாக்கியது போல,

இதையும் படியுங்களேன் – இதுதான் பிரேக்கிங்.. அஜித்தை இயக்க போகும் முருகதாஸ்.! அதுவும் யார் தயாரிப்பில் தெரியுமா.?!

தளபதி விஜய்யை வைத்து அவரது பழைய படங்களில் எந்த கதாபாத்திரத்தை மீண்டும் மறு உருவாக்கம் செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டது. உடனே லோகேஷ் கனகராஜ் சற்றும் யோசிக்காமல் கில்லி படத்தில் வரும் சரவண வேலு கதாபாத்திரத்தை மறுஉருவாக்கம் செய்வேன் என்று கூறினார்.

இதனைக்கேட்ட ரசிகர்க கில்லி படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா? அதற்கான முயற்சிகள் ஏதும் லோகேஷ் கனகராஜ் எடுப்பாரா? என்று எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். அப்படி அவர் எடுத்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top