எப்படியாவது இந்தாள LCU ல கொண்டு வந்துடணும்! லோகேஷ் ஆசைப்பட்டும் நடிக்க மறுத்த நடிகர்!..

by Rohini |   ( Updated:2023-09-25 10:45:44  )
loki
X

loki

LCU Lokesh: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் லோகேஷ். தரமான படங்களையே தொடர்ந்து கொடுத்து வரும் லோகேஷை நோக்கி எல்லா பக்கமும் இருந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி சினிமாக்களும் லோகேஷை வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் 10 படங்களை எடுத்து விட்டு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்று சொல்லும் லோகேஷால் ஒட்டுமொத்த சினிமாவும் அதிருப்தியில் இருக்கின்றன.

இதையும் படிங்க; இது அதுல்ல!.. போஸ்டர்களில் கோட்டை விட்ட லோகேஷ் கனகராஜ்!.. லியோ பரிதாபங்கள்!..

இந்த நிலையில் லோகேஷ் மூலம் தான் அந்த யுனிவெர்ஸ் என்ற வார்த்தையே பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் அவரது யுனிவெர்ஸில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று விருப்பப்படும் நடிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

ஆனால் லோகேஷ் நம் யுனிவெர்ஸில் இவரை எப்படியாவது இழுத்து விட வேண்டும் என்று நினைக்கும் நடிகர் லாரன்ஸ். ஆரம்பத்தில் இருந்தே லாரன்ஸிடம் நடிக்க சொல்லி கேட்டு கொண்டிருக்கிறார் லோகேஷ்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் மிரண்டதற்கு காரணம் இந்த நடிகரா?!… ஓஹோ அதான் அங்க தாவிட்டாரா?…

ஆனால் லாரன்ஸால் இதுவரை நடிக்க முடியவில்லை. ஆனால் லோகேஷின் கதையில் அமைந்த ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் லாரன்ஸ். இந்த நிலையில் விக்ரம் படத்தில் கூட சூர்யா நடிக்க இருந்த கதாபாத்திரம் முதலில் லாரன்ஸுக்குத்தான் சென்றிருக்கிறது.

ஆனால் லாரன்ஸ் நடிக்க வில்லை. அதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறினார். ‘அவர் படத்தில் நடிக்கலாம். ஆனால் ரொம்பவும் இறங்கி போய்விட்டால் பார்க்கும் ரசிகர்கள் குறிப்பாக குழந்தைகள் என்ன இவர் இப்படி பண்றாரு என்ற ஒரு பார்வை என் மீது திரும்பும்.

இதையும் படிங்க: பாலிவுட்டே வேணாம்… யூ டர்ன் போட்ட டாப் இயக்குனர்… ஷாருக்கானுக்காக போட்ட ஸ்கெட்டில் சிக்கிய கோலிவுட் ப்ரின்ஸ்?

மற்றவர்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணலாம். ஆனால் ஒரு வீட்டை எரிக்கிறது, குத்துறது என நான் நடிக்கும் போது குழந்தைகள் அதிகமாக பார்க்கிறார்கள். என்னடா லாரன்ஸ் இப்படி பண்றாரே என ஒரு அவ நம்பிக்கை என் மீது விழும்’ என்று கூறி நடிக்காததன் காரணத்தை கூறினார்.

Next Story