3 நாள் சாப்பிடாம இருப்பான் சூரி!. நான்தான் சாப்பாடு வாங்கி கொடுப்பேன்!. நடிகர் பேட்டி!….

by சிவா |   ( Updated:2025-04-26 23:32:28  )
soori
X

soori

சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடிப்பது என்பது சுலபத்தில் நடந்துவிடாது. அதுவும் சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்கள் பல வருடங்கள் போராட வேண்டும். பலரிடமும் போய் வாய்ப்பு கேட்க வேண்டும். பசி, பட்டினியை தாங்கி நிற்க வேண்டும். நம்பிக்கையோடு முயற்சிகள் செய்து வாய்ப்பை பெற வேண்டும். அப்படி கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும்.

சினிமா பின்னணியோடு வரும் நடிகர்களே முன்னணி நடிகர்கள் ஆக முடியாமல் இருக்கிறார்கள். பாக்கியராஜின் மகன் சாந்தனு, சத்தியராஜ் மகன் சிபி, ஜீவா போன்ற வாரிசு நடிகர்களே இன்னும் போராடி வருகிறார்கள். ஆனால், காமெடி நடிகராக இருந்த சூரி சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

soori (1)
soori (1)

மதுரையை சேர்ந்த சூரி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து படப்பிடிப்பு தளங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். எலக்ட்ரீஷியன், பிளம்பர், பெயிண்ட் அடிப்பது, சுண்ணாம்பு அடிப்பது, குப்பை அள்ளுவது என ஒன்றையும் அவர் விடவில்லை. வயித்து பசியை போக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அது எல்லாவற்றையும் செய்தார்.

விஜய் டிவியில் அப்போது லொள்ளு சபா பிரபலமாகி வந்த நேரம், அங்கெல்லாம் சென்று வாய்ப்பு கேட்டு நின்றிருக்கிறார். அப்படி நின்றவர்களில் யோகிபாபுவும் ஒருவர். பல வேலைகளை செய்த சூரிக்கு பலரும் உதவி செய்திருக்கிறார்கள். அவரின் வயிற்று பசியை பலரும் போக்கியிருக்கிறார்கள். சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து பிரபலமானார். அதன்பின் பல படங்களிலும் தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து முன்னேறினார்.

esther

விடுதலை படம் மூலம் கதையின் நாயகனாக மாறிய சூரி ‘இனிமேல் காமெடி நடிகராக மாட்டேன்’ என அறிவித்துவிட்டார். மேலும், கொட்டுக்காளி, கருடன் போன்ற படங்களிலும் நடித்தார். இதில், கருடன் ஹிட் அடித்தது. அதன்பின் விடுதலை 2 முடித்து மாமன், ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி போன்ற படங்களில் நடித்தார். மண்டாடி விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் மதுரையில் பல இடங்களில் ஹோட்டல் தொழிலும் இவருக்கு சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், லொள்ளு சாபா நடிகர் எஸ்தர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘எனக்கு சந்தானத்தின் வளர்ச்சியை விட சூரியோட வளர்ச்சிதான் ஆச்சர்யமா இருக்கு. நான் சூரிய 3 நாள் சாப்பிடாம எல்லாம் பாத்திருக்கேன். ஒரு சைக்கிள் வச்சிருப்பார். நேரில் பார்க்கும்போது ‘என்னட பண்ற சாப்டியாடானு கேட்டா. அண்ணே நேத்து காலைல சப்பிட்டேன்’ என சொல்லுவான். நான் அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story