Cinema History
லொள்ளு சபா மனோகர் நடிக்க வேண்டிய படத்தில் விஜய் சேதுபதி!.. என்னப்பா சொல்றீங்க?!..
Soodhu kavvum2: சினிமாவில் நடிக்கும் ஆசையில் துபாயில் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்தவர்தான் விஜய் சேதுபதி. சென்னையில் சில வேலைகளை செய்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார். புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடம் கிடைத்தது.
ஒருவழியாக சீனுராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பீட்சா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஒருபக்கம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் நடித்தார். இந்த 2 படங்களுமே ரசிகர்களுக்கு பிடித்து ஹிட் அடித்தது.
அதோடு, எல்லோருக்கும் விஜய் சேதுபதியை பிடிக்கவும் துவங்கியது. அப்போதுதான் சூது கவ்வும் படத்தில் நடித்தார். நளன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தில் இளம் பெண்களை கடத்தி அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்கும் வேலை செய்வார் விஜய் சேதுபதி.
அவருடன் சிலர் சேர்ந்து ஒரு அமைச்சரின் மகனை கடத்த, ஒரு சைக்கோ என் கவுண்டர் போலீஸ் அதிகாரியிடம் சிக்கி அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இந்த கதையை மிகவும் நகைச்சுவையாக எடுத்திருப்பார் நளன் குமாரசாமி. இந்த படமும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
அதன்பின் இப்போது விஜய் சேதுபதி பெரிய நடிகராக மாறிவிட்டார். ஹீரோ, வில்லன் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இப்போது சூது கவ்வும் 2 படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சூது கவ்வும் 2 பட தயாரிப்பாளர் சி.வி.குமார் ‘சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி வேண்டாவே வேண்டாம் என நளன் குமாரசாமி சண்டை போட்டார். அவரோட முதல் சாய்ஸ் லொள்ளு சபா மனோகராக இருந்தது. அவரை மனதில் வைத்தே அந்த கேரக்டரை எழுதி இருப்பதாகவும், அவர்தான் எனக்கு வேண்டும் என சொன்னார். அவர் இல்லனா யூகி சேதுகிட்ட பேசலாம் எனவும் சொன்னார். நான் போய் யூகி சேதுவிடமும் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்து நடிக்கிறேன் என சொல்லிவிட்டார்.
அப்போது கார்த்திக் சுப்பாராஜ், விஜய் சேதுபதி, நளன் குமாரசாமி என எல்லோரும் ஒரு டீம் என்பதால் சூது கவ்வும் கதையை படித்துப்பார்த்துவிட்டு ‘நானே நடிக்கிறேன்’ என சொல்லி விஜய் சேதுபதி நடிக்க வந்தார்’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை வெல்லும் ஏ.ஆர்.ரஹ்மான்?!.. விருது பட்டியலில் அந்த படம்!….