அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகரா வருடாவருடம் என்ன செய்கிறார் பாருங்கள்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர், தனது திரைப்படங்களை நடிப்பது மட்டுமே செய்து வருகிறார். ஆனால், தனது பட விளம்பரங்களில் கலந்து கொள்வது மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பொது இடங்களில் அவரைப் பார்ப்பது அரிது தான் சொல்ல வேண்டும்.

அவருக்கு கோடிக்கணக்கான தீவிர ரசிகர்கள் உள்ளனர். அவரது, திரைப்படம் வெளியானால் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வருகின்றனர். அவர், நடிப்பில் விரைவில் வலிமை திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. அதனை கொண்டாட ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது ஊருக்கே தெரிந்தது.

குரோம்பேட்டையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் உள்ளார். அவர் பெயர் ரமேஷ், அஜித்தின் மீது உள்ள பற்று காரணமாக அஜித் ரசிகன் என்று வைத்துள்ளார். அவர் நடிகர் ராஜேஷ் குமார் அவரின் வீட்டிற்கு வருடாவருடம் காலண்டர் சப்ளை செய்து வருகிறாராம்.

அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, அஜித்திற்கு இப்படி ஒருவரை நான் பார்த்ததே இல்லை வருடாவருடம் என் வீட்டிற்கு காலண்டர் மாத காலண்டர் மற்றும் தின காலண்டர் கொடுத்துவிடுவார். அதில் அஜித்தின் படங்கள் மிக அழகாக இருக்கும் அவரின் வாழ்க்கை லட்சியமே அஜித்தை ஒருமுறையேனும் நேரில் பார்த்துவிட்டால் போதும் என கூறுவாராம்.

இதையும் படியுங்களேன்- நீயா நானா பாத்துக்கலாம்.! போர்க்களத்திற்கு தயாரான ரசிகர்கள்.!

இதனைக் கூறிய நடிகர் ராஜேஷ் இந்த மாதிரியான தீவிர ரசிகர்கள் பலர் அஜித்துக்கு உண்டு. அஜித் மனது வைத்து இவர்களை சந்தித்தால் நன்றாக இருக்கும். மக்கள் திலகம் எம்ஜிஆர் சிவாஜி கூட ரசிகர்களை சந்திப்பதற்கு மணி நேரம் அமைத்து சந்தித்து வந்தனர். அதனை, பின்பற்றினால் அது அவரது ரசிகர்களுக்கு இன்பமாக அமையும் என குறிப்பிட்டார்.

 

Related Articles

Next Story