முருகன் புகழ் பாடிய தமிழ்ப்படங்கள் - ஒரு பார்வை
கந்தா கடம்பா கதிர்வேலா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... என்று கோஷம் முழங்க பக்தர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு படையெடுத்து வருகின்றனர்.
தற்போது கந்த சஷ்டி விரதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 30ல் பிரசித்திப் பெற்ற சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாம் முருகனைப் பற்றிய புகழ் பாடும் படங்களைப் பார்ப்போமா...
முருகன் அடிமை
1977ல் வெளியான முருகக்கடவுள் பற்றிய பக்தி படம். முத்துராமன், ராஜன், கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். தியாகராஜன் இயக்கியுள்ளார். கே.வி.மாதவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
வெற்றிவேல்
2016ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் வசந்த மணி. சசிக்குமார், மியா, பிரபு, நிகிலா விமல் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார்.
பாடல்கள் சூப்பர். படப்பெயரில் முருகனின் வேல் எப்படி வெற்றியை ஈட்டித் தருகிறதோ அதுபோல கதாநாயகனின் வெற்றிக்கு அவனது வேலாகிய கூரிய அறிவுத்திறன் வழிவகுக்கிறது.
கந்தா கடம்பா கதிர்வேலா
முருகனை அடியார்கள் விரும்பி அழைக்கும் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர் கந்தா கடம்பா கதிர்வேலா என்று. ராமநாராயணன் இயக்கத்தில் பிரபு, எஸ்.வி.சேகர், விவேக், வடிவேலு, ரோஜா, நிரோஷா, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் சூப்பர்.
சக்திவேல்
1994ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார். செல்வா, கனகா, விஜயகுமார், ஜெய்கணேஷ், ராஜீவ், மஞ்சுளா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.
வேலன்
கவின் இயக்கத்தில் முகன் ராவ், சூரி, மீனாட்சி கோவிந்தரராஜன், ஸ்ரீரஞ்சனி, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். 2021ல் படம் வெளியானது.
சூரசம்ஹாரம்
1988ல் வெளியான படம். ஆக்ஷன் திரில்லர் படம். சித்ரா லெட்சுமணன் இயக்கிய இந்தப்படத்திற்கு வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுதியுள்ளார். கமல்ஹாசன், நிரோஷா, கிட்டி, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. படத்தின் பெயர் தான் சூரசம்ஹாரம். படத்தில் அபலைப் பெண்ணை சீரழிக்கும்வில்லனை சம்ஹாரம் செய்யும் சூரராக கமல் நடித்துள்ளார். போதைக்கடத்தல் கும்பல் பற்றிய கதை இது.
கந்தன் கருணை
ஏபி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் கந்தன் கருணை. சிவாஜி, சிவக்குமார், ஜெமினிகணேசன், சாவித்ரி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவனின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.
தெய்வம்
1972ல் எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் வெளியான படம் தெய்வம். ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர். குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் உருவான இந்தப்படத்தில் பக்திப் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாயின.
கந்தர் அலங்காரம்
1979ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கே.சுந்தரம். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்துள்ளார். தேங்காய் சீனிவாசன், சுஜாதா உள்பட பலர் நடித்துள்ளனர். முருகனின் பெருமைகளைப் பற்றி எடுத்துக்கூறும் படம் இது.
முருகன் காட்டிய வழி
1974ல் வெளியான பக்தி திரைப்படம். பி.மாதவன் இயக்கத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்துள்ளார். ஏவிஎம்.ராஜன், விதுபாலா, ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.
முருகனின் பக்தனுக்கு ஏற்படும் சோதனைகளையும் அவர் அதை தனது பக்தியால் கடந்த விதத்தையும் வெகு அழகாகப் படத்தில் எடுத்துள்ளார் இயக்குனர் பி.மாதவன். அந்தக்காலகட்டங்களில் பட்டி தொட்டி எங்கும் இந்தப்படமானது தாய்மார்களிடம் பேராதரவைப் பெற்றது.