திரையில் வெளியான சிவனின் சூப்பர்ஹிட் பக்தி திரைப்படங்கள்
இன்று மகாசிவராத்திரி. பக்தர்கள் அனைவரும் சிவ தலங்களில் கண்விழித்து நான்கு கால பூஜைகளையும் கண்டு சிவனைத் தரிசித்து தங்களுடைய குறைகளைப் போக்கிக் கொள்வர். அந்தக்காலத்தில் பக்தர்கள் கண்விழிக்க வேண்டும் என்பதற்காக தெருக்களில் வீடியோவை வைத்து பக்தி திரைப்படங்களைப் போட்டு பார்ப்பார்கள்.
அவற்றில் பெரும்பாலானவை சிவனின் படங்களாகத்தான் இருக்கும். சரஸ்வதி சபதம், திருவிளையாடல், தெய்வம், திருமலை தென்குமரி, கந்தன் கருணை ஆகிய படங்களை நாம் பார்த்து ரசித்திருப்போம். இந்தக்காலம் வேற லெவலில் உள்ளது. சிவதலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும் என்பதற்காக நகர்ப்புறங்களில் கச்சேரி, பக்திபாடல்கள், பரதநாட்டியம், நாடகம் என களைகட்டும். நாம் சிவராத்திரியன்று பார்;த்து ரசிக்கும் வகையில் சில பக்திப்படங்களைப் பார்க்கலாம்.
இவை அனைத்தும் சிவனின் பெயரில் உள்ளன. இவற்றில் ஒரு சில படங்கள் மட்டும் கமர்ஷியலாக உள்ளன. ரொம்பவும் பக்தியில் மூழ்கி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவற்றைப் பார்க்கலாமா...
சிவலீலை
2017ல் வெளியான பக்தி படத்தை விஎஸ்என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கே.ஆர்.விஜயா, சித்தாரா, கவிதா, கல்யாண்குமார், சீனிவாச மூர்த்தி, சுதர்சன், லோகேஷ், சஞ்சய் உள்பட பலர் நடித்துள்ளனர்.
டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்துள்ளார். திரைக்கதை எழுதி, தயாரித்து இயக்கியவர் வி.சுவாமிநாதன். அருமையான சிவனின் லீலைகள் அடங்கிய பக்தி திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்.
சிவன் மகிமை
சிவன் மகிமை திரைப்படத்தை கிரிதர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக இந்திரா தயாரித்துள்ளார். சீனிவாச மூர்த்தி, பத்மப்பிரியா, தொட்டன்னா, ஆஷாலதா, ஸ்ரீலதா, ராஜனந்த், டிஸ்கிரி நாகராஜ், மைசூர் லோகேஷ், ஸ்ரீநாத் உள்பட பலர் நடித்துள்ளனர். ரங்கராவ் இசை அமைத்துள்ளார். உன்சூர் கிருஷ்மூர்த்தி இயக்கியுள்ளார்.
படம் சிவனின் மகிமையை எடுத்துரைக்கும் வண்ணம் வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள பக்தி திரைப்படம். சிவபக்தர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் கண்டு ரசிக்க வேண்டிய படம். நஞ்சுண்டேஸ்வரரின் புராணகதை பற்றி படம் எடுத்துக்கூறுகிறது.
சிவன்
1999ல் வேலுபிரபாகரன் இயக்கத்தில் வெளியான படம். ஆதித்யன் இசை அமைத்துள்ளார். அருண்பாண்டியன், துரைசாமி, ராதிகா, சுவாதி, அகானா உள்பட பலர் நடித்துள்ளனர். எகிப்து நாட்டு கிளியோபாட்ரா, ஓ என் பெண்மை, பெசரட், பெசரட், ருக்குத்தான் ருக்குத்தான், உதிரை கில்லி உள்பட பல பாடல்கள் உள்ளன.
சிவா
1989ல் வெளியான படம். அமீர்ஜான் இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ள ரஜினிகாந்த், ரகுவரன், ஷோபனா, சௌகார் ஜானகி, ராதாரவி, வினுசக்கரவர்த்தி, ஜனகராஜ், டெல்லி கணேஷ், பூர்ணம் விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அட மாப்பிள்ளை, அடி கண்ணாத்தாள், அடி வான்மதி என், இருவிழியின் வழியே, வெள்ளிக்கிழமை ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப்படத்தில் ரஜினிகாந்த் சிவா என்ற பெயரில் ஆன கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார்.
தாண்டவம்
2012ல் விக்ரம் நடிப்பில் வெளியான படம். இது ஒரு அதிரடி திரைப்படம். விக்ரம், அனுஷ்கா, சந்தானம், நாசர், எமி ஜாக்சன், ஜெகபதி பாபு, லட்சுமி ராய் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் மெலடி ரகங்கள். அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படம். யாரடி மோகினி, நீ என்பதே நான் தானடி....ஒரு பாதி கதவு, வில் யூ பி தேர் உள்பட பல பாடல்கள் உள்ளன.