காதல் சின்னத்தை அந்த நபருடன் கைகோர்த்து காண்பித்த லாஸ்லியா.! நொறுங்கி போன ரசிகர்கள்...
இலங்கையில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு, விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகை லாஸ்லியா.
அந்நிகழ்ச்சியில், சக போட்டியாளர் கவின் உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி அதிகம் பிரபலமானார். ஆனால், அந்த போட்டி முடிந்த பின்னர் அவர் அவர் துறைகளில் பிசியாகி விட்டனர்.
அதன் பின்னர் நடிகை லாஸ்லியா தமிழ் சினிமாவில் ஃபிரென்ஷிப் எனும் படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அண்மையில் பிக் பாஸ் தர்சன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா எனும் திரைப்படதிலும் நடித்தார்.
இதையும் படியுங்களேன் - சீரியல் நடிகைகளுக்கு இதுதான் பிரச்சனை.! கார்த்தி பட வாய்ப்பு அதுனால போயிடுச்சி.. மனம் வருந்திய மீனாட்சி.!
அண்மையில் ரசிகர் ஒருவருடன் லாஸ்லியா இருக்கும் புகைப்படம் வெளியாகியது. அதில் அந்த ரசிகரும் லாஸ்லியாவும் சேர்ந்து ஹார்ட்டின் காதல் சின்னத்தை காண்பிப்பது போல இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக் ஆகிவிட்டனர். அதன் பின்னர் தான் அந்த ரசிகரின் மீதான அன்பு மிகுதியால் இந்த ஸ்டில் வெளியாகியுள்ளது என்று தெரிந்தவுடன் சற்று அமைதியாகினர்.