கிறிஸ்துமஸ் சாண்டா உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த லாஸ்லியா!!
இலங்கையில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் லாஸ்லியா. பிரபலமாக வேண்டும் என்பதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் பங்கு பெற்றார். பிக்பாஸ் வீட்டில் எந்நேரமும் கவினுடன் சுற்றிவந்த இவர் மக்களிடம் சற்று ரீச் ஆனார்.
பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் கிடைத்ததால், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதாலும், தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஹர்பஜன் சிங்குடன் இணைந்து 'ப்ரெண்ட்ஷிப்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் படுதோல்வி அடைந்தது. தற்போது லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் மலையாளத்தில் வெளியான ஆண்டராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
இதுதவிர இவர் கைவசம் வேறு எந்தப்படமும் இல்லை. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் சாண்டா உடையில் மிகவும் கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப்படத்திற்கு லைக்குகளை, கமெண்டுகளை குவிந்து வருகின்றது.