More
Categories: Cinema News latest news

உனக்கு என்னம்மா ஆச்சு!.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா…

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க சென்னை வந்து செட்டில் ஆனார். பிக்பாஸ் வீட்டில் பலருக்கும் இவரை பிடித்துப்போனது. ஓவியாவுக்கு பின் லாஸ்லியாவுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகினர். நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார்.

Advertising
Advertising

ஆனால், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அவரின் அப்பா அவரை கடுமையாக கண்டித்தார். இதன் காரணமாகவே கவின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்த நிகழ்ச்சிக்க் பின் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தது.

எனவே, முழு நேர நடிகையாக அவர் உருவெடுத்தார். கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கிய ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென தலை முடியை வெட்டி பாப் கட்டிங்குக்கு அவர் மாறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உனக்கு என்னம்மா ஆச்சு?’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா