அத ஏன் மறைச்ச..? வெயிலுக்கு குளு குளுனு போஸ் கொடுத்த லாஸ்லியா...
தனது அழகான தமிழ் மற்றும் வசீகர குரலால் தமிழ் ரசிகர்களை வசியம் செய்தவர் தான் இலங்கை பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் காரணமாக லாஸ்லியாவிற்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் லாஸ்லியா இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷன் உடன் இணைந்து லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிறைய போட்டோசூட் நடத்தி இணையத்தில் பகிர்ந்து வரும் லாஸ்லியா தற்போது ஊதா நிற சேலையில் தன் அழகை மெருகூட்டி ரசிகர்களுக்காக அந்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் லாஸ்லியாவை வர்ணித்து வருகின்றனர்.