ஒட்டிப்போன கன்னம்... ஓவியாவுக்கு தங்கச்சி மாதிரி மாறிப்போன லாஸ்லியா!

by பிரஜன் |
ஒட்டிப்போன கன்னம்... ஓவியாவுக்கு தங்கச்சி மாதிரி மாறிப்போன லாஸ்லியா!
X

losliya

உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மான லாஸ்லியாவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!

இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளராக லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். குறுகிய காலத்தில் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. ஆர்மிஸ் உருவாகி மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

பிக்பாஸில் கவினுடன் கடை போட்டு தமிழக மக்களை கவர்ந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் கவின் யார் என்றே தெரியாதது போன்று தனது கேரியரில் முழு கவனத்தை செலுத்தி இன்று ஹீரோயினாக வளர்ந்து நிற்கிறார்.

losliya

losliya

லாஸ்லியா ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து அப்லாஸ் அள்ளினார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி வரும் அவர் கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து ஓவியாவுக்கு தங்கை போன்று அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பார்த்து நம்ம லாஸ்லியாவா இது என ரசிகர்கள் செம ஷாக்காகி விட்டனர்.

Next Story