கவின் ஹனிமூனே முடிச்சிட்டு ஜாலியா இருக்காரு!.. லாஸ்லியா என்ன எக்ஸ்பிரஷனே இல்லாம புலம்பிட்டு இருக்காரு!..

பிக் பாஸ் பிரபலம் நடிகை லாஸ்லியா தனது புதிய ஆல்பம் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆண்களுக்கு ஏகப்பட்ட சூப் சாங் உள்ளநிலையில் பெண்களுக்கான பிரேக்கப் சாங்காக “ உடைஞ்சு உடைஞ்சு” பாடல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்த பாடல் அறிவிப்புக்காக வொண்டர் வுமன் தோற்றத்தில் இருக்கும் போட்டோக்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார் லாஸ்லியா. இந்நிலையில், தற்போது அந்த பாடல் வெளியாகி இருப்பதாக அறிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிரி புதிரியா வெளியான ஏகே 63 பட அறிவிப்பு! சிறுத்தை சிவா இருக்க வேண்டிய இடத்தில் ஆதிக் – என்னாச்சு தெரியுமா?

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அங்கே சகப் போட்டியாளராக கலந்து கொண்ட கவின் உடன் காதல் ஏற்பட்டது. ஆனால், ப்ரீஸ் டாஸ்க்கின் போது வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் இருவரது காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் கவின் ஒருபக்கம் நடிக்க ஆரம்பித்த நிலையில், லாஸ்லியாவும் ஹீரோயினாக மாறினார். பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்த லாஸ்லியாவுக்கு இரண்டு படங்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதன் பின்னர் எந்த ஒரு படமும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: மைக்க பாத்ததும் ஓடுற ஆளு! இவர வச்சா அந்த சீன எடுக்குறீங்க – ‘தளபதி68’ல் விஜய்க்கு டஃபே இதுதான்

கவின் உடனான காதல் தோல்வி காரணமாக நடிகை லாஸ்லியா தற்போது பிரேக்கப் சாங்கை உருவாக்கியுள்ளார் இன்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சமீபத்தில், நடிகர் கவினுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் ஜாலியாக ஹனிமூன் எல்லாம் முடித்துவிட்டு அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருகிறார் என்றும் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார் என்றும் பங்கம் செய்து வருகின்றனர்.

மேலும், ஆல்பம் பாடலுக்கு கூட முகபாவனைகள் சரியாக கொடுக்க முடியாத அளவுக்கு லாஸ்லியா நடனமாடி இருப்பதை பல ரசிகர்கள் விமர்சித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it