வச்சு பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கே.. க்யூட் போட்டோ போட்ட லாஸ்!!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-19 07:28:27  )
losliya
X

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இலங்கை பெண் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான பெண்ணானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவினுடன் காதல் வலையில் விழுந்து மக்களிடையே பிரபலமானார்.

பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாகியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஹர்பஜன் சிங்குடன் இணைந்து 'ப்ரெண்ட்ஷிப்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் படுதோல்வி அடைந்தது. தற்போது லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் மலையாளத்தில் வெளியான 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' என்கிற படத்தின் ரீமேக் ஆகும்.

losliya

losliya

இதுதவிர இவர் கைவசம் வேறு இந்தப்படமும் இல்லை. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றும் இவர் தற்போது மஞ்சள் நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி உள்ளார். இந்தப் படத்தில் லாஸ்லியாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள் கமெண்டில் கவிதையால் வர்ணித்து வருகின்றனர்.

Next Story