60's பட நாயகிகளை நியாபகப்படுத்தும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா..! பாவாடை தாவாணியில் செம லூக்...
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார் நடிகை லாஸ்லியா. அந்த பிரபாலாமான நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.
பிக்பாஸ் வீட்டில் பலருக்கும் இவரை பிடித்துப்போக பலருக்கும் மகள் போன்ற உணர்வை ஏற்படுத்தினார்.. ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார்.
அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கிய ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனிடையே தனது உடலை ஒல்லியாக குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார்.
அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், தற்போது பாவாடை தாவாணியில் அந்த கால நாயகிகளை நியாபகப்படுத்தும் விதமாக வெவ்வேறு ஸ்டைலில் போட்டோ ஷூட் எடுத்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகளை, கமெண்டுகளை குவிந்து வருகின்றது.
வீடியோவை பார்க்க—->https://www.instagram.com/p/CZ4HHleJofz/