வீட்டுக்கு வெளியே எப்போதும் இளம் பெண்கள்!.. ஜெமினி கணேசன் மகள் சொன்ன ஷாக்கிங் அப்டேட்!..

50,60களில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அடுத்து பெரிய ஹீரோவாக இருந்தவர் ஜெமினி கணேசன். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அழகானவர், நன்றாக படித்தவர். நன்றாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர் என பல வசீகரங்கள் ஜெமினியிடம் இருந்தது. அதுவே, பல பெண்களை ஈர்த்தது.
அந்த கால கருப்பு வெள்ளை பட ஹீரோக்களில் ஹேண்ட்சம்மாக இருந்தவர். இதனால், அந்த கால இளம் பெண்கள் மத்தியில் ஜெமினி கணேசனுக்கு பெரிய கிரேஸ் இருந்தது. ஏராளமான காதல் கடிதங்கள், பெண்களின் சந்திப்புகள் என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர். சினிமாவில் மட்டும்மல்ல. நிஜவாழ்விலும் ஜெமினி கணேசன் காதல் மன்னனாகவே இருந்தார்.
ஜெமினி நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்தவர் இவர். அதனால்தான் அவரின் பெயரின் முன்பு ஜெமினி சேர்ந்துகொண்டது. ஜூலியானா, நடிகை சாவித்ரி, அலமேலு என மூன்று பேரை திருமணம் செய்து கொண்டவர் இவர். 80 வயதிலும் நான்காவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால், அந்த திருமணம் நீண்டநாள் நீடிக்கவில்லை.
இந்நிலையில், ஜெமினி கணேசனின் மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘அப்பா மீது பல இளம் பெண்கள் கிரஸ்ஸாக இருந்தனர். எங்கள் வீட்டின் முன்பு எப்போதும் ஏராளமான பெண்கள் நிற்பார்கள். அதில் பலரும் அப்பாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடம்பிடிப்பார்கள்.
இதையும் படிங்க: கையில் பத்து ரூபாய்!.. சென்னைக்கு ரிக்ஷாவில் வந்து இறங்கிய இளையராஜா!.. பாரதிராஜா சொன்ன சீக்ரெட்!..
என்னுடைய தத்தா அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்களை அவர்களின் வீட்டிற்கு கொண்டுபோய் விடுவார். இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடக்கும். அப்படி வரும் பெண்களிடம் ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். வேறு ஒரு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என என் அப்பாவும் பல பெண்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்’ என கமலா செல்வராஜ் தனது அப்பா ஜெமினி கணேசன் பற்றி பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சாவித்திரியை பார்க்க இப்படி எல்லாம் பண்ணுவாரா? ஜெமினியை பற்றி இயக்குனர் ஸ்ரீதர் பகிர்ந்த சீக்ரெட்..