Dare Devil: No போட்டோஷூட்!.. எல்லாம் AI.. போஸ்டரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா!…

X
Dare Devil: No போட்டோஷூட்!.. எல்லாம் AI.. போஸ்டரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா!…

குட் பேட் அக்லி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்கிற படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதோடு, அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் எந்த தயாரிப்பாளரும் இந்த படத்தை தயாரிக்க முன்வராத நிலையில் அஜித்தே சொந்தமாக படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில்தான், நேற்று இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்கு வெளியிட்டது. இது அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தை வைத்து உருவாக்கப்பட்ட போஸ்டர் என்பது தெரியவந்திருக்கிறது. அஜித் கார் ரேஸில் பிசியாக இருப்பதால் அவரை வைத்து போட்டோஷூட் செய்யாமல் இப்படி AI மூலம் போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில் தாயக்கட்டைகளில் எண்ணிக்கை 10 வருவதாகவும், அது அஜித்தின் செண்டிமெண்ட் நம்பர் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், அஜித்துக்கு பிடித்த சிவப்பு, வெள்ளை நிறங்களில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.