D.Iman: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகரோ நடிகையோ நல்ல மார்கெட்டோடு வளர்ந்து விட்டால் அவர்கள் நடிக்கும் படங்களில் பின்னனியில் வேலைப் பார்க்கும் கலைஞர்களின் உழைப்பு கண்களுக்கு தெரிவதில்லை.
உதாரணமாக விஜயின் படம், அஜித்திடன் படம், ரஜினியின் படம் என்றுதான் சொல்கிறோமே தவிர அந்தப் படங்களின் இயக்குனர் பெயரைக் கூட சொல்வதில்லை. அந்தளவுக்கு சினிமாவின் தரம் மாறியிருக்கிறது.
இதையும் படிங்க: ஒரு தடவ சொன்னா!. வசனத்தை ரஜினி எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.. தலைவரு செம ஷார்ப்!…
அந்த வகையில் ஜில்லா படத்திற்காக டி.இமான் இசையமைக்கும் போது சில பல பிரச்சினைகளை சந்தித்தாராம். அதாவது அந்தப் படத்தில் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடல் வரும். ஆனால் முதலில் அந்த வரிகளே இல்லையாம்.
தானானா தானானா என்றுதான் இருந்ததாம். இமான் இதென்ன இப்படி இருக்கிறது? வேறு எதாவது வரிகளை போடலாமே என்று சொல்லியிருக்கிறார். அந்தப் படம் மதுரை போன்ற சுற்று வட்டாரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை வெறுப்பேத்திய கவுண்டமணி…! மன்னிப்பு கேட்க சொன்னா மானத்தையே வாங்கிட்டாரே!
அதனால் அதற்கேற்றவாறு டி.இமான் சவுண்ட்ஸ்கள் எல்லாவற்றையும் போட்டுவிட்டாராம். அதன் பிறகே அந்தப் பாடல் வெளிநாட்டில் படமாக்கப்போகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வைரமுத்துவிடம் இருந்து வரிகளும் வந்துவிட்டதாம்.
அதில் கண்டாங்கி கண்டாங்கி என்று இருக்க. வெளி நாட்டில் எப்படி கண்டாங்கி சேலை கட்டி ஆடுவார்கள் என்று கூட யோசித்தாராம் இமான். அவர் நினைத்தப்படியே காஜல் அந்தப் பாட்டில் ஒரு காட்சியில் கூட கண்டாங்கி சேலை கட்டி ஆடியிருக்கமாட்டார்.
இதையும் படிங்க: தூக்கலா காட்டுறியே தூங்கவிடாம பண்ணுறியே!.. இளசுகளை இம்சை பண்ணும் திவ்யா துரைசாமி…
இவ்ளோ மிஸ் மேட்ச்களோடு வெளிவந்த இந்தப் பாடல் இந்தளவுக்கு வரவேற்பை பெற்றதன் காரணம் ஸ்டார்டெம்தான் என்று இமான் கூறினார். அது விஜயின் பாடலாகவோ காஜலின் பாடலாகவோத்தான் மக்கள் ரசித்தார்கள் என்று கூறினார்.
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…