Cinema News
ஒரே படத்துல ஒன்னா நடிச்சு கல்யாணம் செய்த காதல் ஜோடிகள்! ஆல் டைம் ஃபேவரைட் அஜித்-ஷாலினி இல்லாமலா?
Love Couples in Tamil Cinema: சினிமாவைப் பொறுத்தவரைக்கும் நிறைய ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்தான். அதற்கு உதாரணமாக எத்தனையோ ஜோடிகளை குறிப்பிடலாம். ஆனால் நடித்த ஒரே படத்தில் காதல் மலர்ந்து திருமணம் செய்த ஜோடிகளை பற்றித்தான் இதில் பார்க்க இருக்கிறோம்.
கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்: பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்தவர். ஆனால் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெறவில்லை. என்றாலும் கார்த்திக்கையும் தாண்டி நன்கு நடனம் ஆடக் கூடியவர். அவர் நடித்த தேவராட்டம் படத்தில் குத்து டான்ஸ் ஆடி அனைவரையும் ஆடவைத்திருப்பார். அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த மஞ்சிமாவையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: எந்த நடிகரும் நெருங்காமல் பார்த்துக் கொண்ட நடிகையின் தந்தை! சினிமாவில் மகளை பெரியாளாக்க அப்பா எடுத்த முயற்சி
ஆர்யா-சாயிஷா: வயது வித்தியாசம் இருவருக்கும் அதிகம் என்றாலும் திடீரென சாயிஷாவை திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தார் ஆர்யா. இவர்கள் இருவரும் கஜினிகாந்த் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அதன் பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இப்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
ஆதி – நிக்கி கல்ராணி: இந்த ஜோடியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. திடீரென தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்கள். மரகத நாணயம் என்ற படத்தில் தான் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். அந்த படத்தின் போதே இருவருக்கும் காதல் பிறக்க ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. டி. இமானை தொடர்ந்து அவரது முதல் மனைவி ஓபன் பேட்டி!..
அஜித் – ஷாலினி: ஆல் டைம் ஃபேவரைட் ஜோடி என்றால் அது அஜித்-ஷாலினி ஜோடிதான். அமர்க்களம் படத்தில் நடிக்கும் போதில் இருந்தே இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள். இதில் ஷாலினி மீது அஜித்தான் அதிகளவு காதலை பொழிந்தார் என்று அமர்க்களம் படத்தில் பணிபுரிந்த ஒரு சில பேர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். ஏன் ஷாலினியின் தங்கை ஷாமிலி கூட அவர்கள் இருவரின் காதல் லீலைகளை ஒரு சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். இப்போது அஜித் சினிமா கெரியரை நல்ல படியாக பார்த்துக் கொள்கிறார் என்றால் அஜித்துக்கு முழு சுதந்திரம் கொடுத்து சந்தோஷமாக வைத்திருப்பது ஷாலினிதான்.