பெருசுகளுக்கெல்லாம் புரியாது!..தத்தளித்த ‘லவ் டுடே’ திரைப்படத்தை கரைசேர்த்த அந்த பெண்!..பரிசுமழையில் மிதக்கும் பிரதீப்!..
‘டாப் ஆஃப்தி டௌன்’ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் பிரதீப் ரெங்கநாதன். ஒரு நல்ல படத்திற்கு டாப் ஹீரோக்கள் தேவையில்லை. ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் போதுமானது என்பதை சமீபத்தில் வெளிவந்த படமான ‘லவ் டுடே’ திரைப்படம் நிரூபத்திருக்கிறது.
லவ் டுடே
இந்த திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார் பிரதீப் ரெங்கநாதன். படத்தில் பிரதீப்பிற்கி ஜோடியாக இவானா நடித்திருக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா. மேலும் படத்தில் சத்யராஜ், யோகிபாபு, ராதிகா உட்பட பலரும் நடித்திற்கு இந்த படம் 2k கிட்ஸ் வாழ்வை அடிப்படையாக கொண்டு இந்த கால நிகழ்வுகளோடு ஒப்பிட்டு படம் அமைந்திருக்கிறது.
படத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக்கொண்டே இருக்கின்றது. படம் வெளியாகி 2 வாரங்களை கடந்தாலும் வசூலிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 50 கோடி வசூல் பட்டியலிலு லவ் டுடே இணைந்துள்ளது.
பிரதீப் ரெங்கநாதன்
ஆரம்பகாலங்களில் ஷார்ட் மூவிஸ் எடுத்துக் கொண்டிருந்த பிரதீப் 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் 90ஸ் கிட்ஸ் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு அமைந்ததால் அந்த படத்திற்கும் ஏராளமான வரவேற்புகள் கிடைத்தன.
அதன் பின் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்த லவ் டுடே திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரதீப். ஒரு பக்கம் பல நட்சத்திரங்கள் சூழ வெளிவந்த பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் பெருமையையே இந்த லவ் டுடே திரைப்படம் மறக்க வைத்துவிட்டது.
லவ் டுடே துவக்கம்
முதலில் பிரதீப் இந்த கதையை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் தான் போய் சொல்லியிருக்கிறார். அவருக்கு இந்தக் கதை பிடித்துப் போக அவரிடமும் நான் தான் ஹீரோ என்று சொல்ல அதற்கும் சரி என்று தான் சொல்லியிருக்கிறார் ஞானவேல்ராஜா. ஆனால் ஞானவேல்ராஜா ஏதோ சில பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு முழிக்க இந்த படம் உருவாவதில் தாமதம் ஆகியிருக்கிறது.
அதன் பின் பிரதீப் ஞானவேல்ராஜாவிடம் ‘சார், ரொம்ப தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது. உடனே இந்த படத்தை எடுத்தாக வேண்டும், நான் வேண்டுமென்றால் வேறொரு நிறுவனத்திடம் சொல்லட்டுமா? ’ எனக் கேட்டிருக்கிறார் பிரதீப். உடவே ஞானவேல்ராஜா சம்மதிக்க அதன் பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்தை அணுகியிருக்கிறார்.
ஆனால் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சகோதரர்கள் இந்த படத்தின் கதையை கேட்டு பிடிக்கவில்லை என்று நிராகரித்து விட்டனராம். ஆனால் அவர்களின் மகளான அர்ச்சனா கல்பாத்தி தான் படத்தின் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. தைரியமாக எடுக்கலாம் என சொல்ல அதன் பின் தான் ஏஜிஎஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.
மிகப்பெரிய வெற்றி
இன்று யாரும் எதிர்பாராத அளவில் ஒரு புதுமுக நடிகரால் கோடிக்கணக்கில் வசூலை வாரி இறைக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். படம் வெளியாகி முதல் நாளில் 3 கோடியும், இரண்டாம் நாளில் 5.35 கோடியும், மூன்றாம் நாளில் 6.25 கோடியும் மொத்தமாக இந்த மூன்று நாள்களில் கிட்டத்தட்ட 14 கோடி அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடி அளவில் வசூலில் மிதந்து கொண்டிருக்கிறது.
இந்த அபரிதமான வெற்றியால் பிரதீப்பிற்கு ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு காரை பரிசாக அளித்துள்ளதாம். மேலும் தன்னுடைய அடுத்த படத்திற்கும் பிரதீப்பை தான் கமிட் செய்திருக்கிறதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.