மீண்டும் அந்த வெற்றி காம்போவுடன் இணையவுள்ள லவ் டூடே இயக்குனர்… ஹீரோ யார்ன்னு தெரியுமா??

Pradeep Ranganathan
கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டூடே” திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் முக்கிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “லவ் டூடே” திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடிகளையும் தாண்டி வசூல் ஆனது.
தமிழகத்தில் இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் இத்திரைப்படம் டப் செய்து வெளியிடப்பட்டது. மேலும் “லவ் டூடே” திரைப்படம் ஹிந்தியிலுக் ரீமேக் ஆகவுள்ளதாகவும் அதில் வருண் தவான் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pradeep Ranganathan
இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ரஜினியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், அத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அத்தகவல் எந்த வித அதிகாரப்பூர்வமும் இல்லாத தகவல் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்த ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அவர் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அத்திரைப்படத்தில் மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளாராம்.

Yuvan Shankar Raja
“லவ் டூடே” திரைப்படத்தைப் போலவே அவர் இயக்கும் புதிய திரைப்படத்திலும் பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. “லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த பிரதீப் ரங்கநாதனுக்கு ரசிகர்களின் மத்தியில் தற்போது மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்த பாலச்சந்தர்.. பின்னணியில் இப்படி ஒரு சோகக்கதை இருக்கா?!..

Love Today
இந்த வரவேற்பை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஹீரோவாக களம் இறங்கவுள்ளாராம். மேலும் இத்திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.