அந்த கம்பேரிசனே தப்பு... ஆனா சந்தோஷமா இருக்கு...லவ் டுடே வெற்றிக்கு இதுதான் காரணமா?
இன்றைய காதல் இளசுகள் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று படம் வெளியாகி 2 வாரங்களுக்குள் கூட்டம் கூட்டமாகப் போய் திரையரங்கை நிறைத்து விட்டார்கள்.
படத்திற்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதற்கு என்ன காரணம்? படத்தில் அப்படி என்ன விசேஷம் உள்ளது என்பதை சொல்ல வருகிறார் படத்தின் நாயகனும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன். பார்க்கலாமா...
லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரே படத்தின் மூலம் செம ஹிட்டானார். கொஞ்சம் பிரபுதேவா, கொஞ்சம் தனுஷ் என்ற சாயல்...வெகுளித்தனமான சிரிப்புடன் சொல்கிறார்...
இந்தப்படத்தை ரியலா எடுக்கணும்னு ஆசை. இதுல எங்கயுமே பொய் சொல்லியிருக்க மாட்டேன். எல்லா விஷயத்துலயும் நடக்கறதைக் காமிச்சேன். கேட்க சங்கடமாயிருந்தா மியூட்டா இருக்கும். ப்ளரா இருக்கும். ஆனா பார்க்கும்போது ஏதோ கெட்ட வார்த்தைத் தான் பேசுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டே இருக்கும்.
இன்னிக்கு வந்து பிரண்ட்ஸ்க்குள்ள அதிகமா அசிங்க அசிங்கமான லார்த்தையா பேசிக்கிறாங்க. ஆனா உண்மையிலேயே ரொம்ப பாசக்காரங்க. பிரண்ட்ஸ்க்குள்ள இது சகஜமாயிடுச்சு. ஆனா அதோட மீனிங்க அவங்க யோசிக்கிறதுல்ல. சும்மா கேலியா பேசிடுறாங்க. இது ஒரு நடைமுறை வாழ்க்கையா மாறிக்கிட்டு வருது.
இதை நாம பர்சனலா எடுத்துக்கிட்டா ரொம்ப கஷ்டம். இவ்ளோ நாள் ஹீரோவும், ஹீரோயினும் நம்ம எல்லாத்துலயும் கரெக்ட்டுன்னே காட்டுவாங்க. அவங்க எதுவுமே தப்பே பண்ணாத மாதிரி காட்டுவாங்க. ஆனா வாழ்க்கை அப்படி இல்லேல. லவ்டுடே படத்துல எனக்கு ரெண்டு பேருமே முக்கியமான கேரக்டர்.
நான் ஹீரோங்கறதால ஹீரோக்கும் நான் சப்போர்ட் பண்ண முடியாது. ஆடியன்ஸ் பார்வையில இருந்து பார்த்தா ரெண்டு பேருமே கரெக்டாத் தான் பேசுற மாதிரி தெரியும். அவங்க யாருக்கு சப்போர்ட் பண்றாங்களோ அது அவங்க இஷ்டம்.
நிறைய தப்புகள் நம்ம செய்றோம். அதைத் திருத்திக்க விரும்பறோம். திருத்திக்கறோம். திரும்பவும் தவறு செய்றோம். அதையும் திருத்திக்கிட்டு வாழ்றதுதான் வாழ்க்கை. அதுதான் ரியாலிட்டி. எல்லாருமே தப்பு செய்றோம்.
மனுஷங்கன்னா தப்பு பண்ணுவாங்க. நடக்கும்போது விழுந்தா தான் நடக்க முடியும். எடுத்த உடனே நீங்க நடக்க மாட்டீங்க. அதுக்கு அப்புறம் ஒரு அம்மா வந்து கைபிடிச்சி நடக்க சொல்லித் தருவாங்க.
டைரக்ஷன் பார்த்துட்டு ஆக்ட் பண்றது ரொம்ப கஷ்டமான பிராசஸா இருக்கும். அங்க மானிட்டர்...இங்க மானிட்டர்...நாம ஒரு ஒரு நேரத்துக்கும் மானிட்டர செக் பண்ணிக்கிட்டு இருந்தோம்னா எவ்ளோ டைம் எடுக்கும்...? டயர்டாவும் ஆயிருப்பேன். ஆனா படம் புல்லா இப்படி எடுத்துக்கிட்டு இருக்கோம். தனுஷ் சாரும், பிரபுதேவா சாரும் எங்கேயோ இருக்காங்க.
நான் பர்ஸ்ட் படம் இப்ப தான் நடிக்கிறேன். அந்த கம்பேரிசனே தப்பா இருக்கு. ஆனா சந்தோஷமாவும் இருக்கு. என்ன இவ்ளோ பெரிய இது கூட கம்பேரிசன் பண்றாங்கன்னு இருக்கும்போது சந்தோஷம் வரத்தான் செய்யும். ஆனா அந்தக் கம்பேரிசன் கூடாதுன்னு தோணுது. ஏன்னா எங்கேயோ இருக்காங்க.
எஸ.ஜே.சூர்யா சார், பாக்யராஜ் சார் இவங்கள்லாம் எப்படி இருக்காங்க..? அப்படி தான் நான் ஃபீல் பண்ணுவேன்.