
Cinema News
லவ் டுடேவும் காப்பியா? சொந்தமா கதையே எழுதமாட்டார் போல நம்ம பிரதீப்!..
தமிழ் சினிமாவிற்கு கோமாளி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் குறும்படங்கள் எடுத்து அதன் மூலம் வரவேற்பு பெற்று சினிமாவிற்கு வந்தார்.
அவர் எடுத்த குறும்படத்தையே பிறகு லவ் டுடே என்று திரைப்படமாக்கினார். அவரின் முதல் படம் கோமாளி வந்த பொழுது இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மீது பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டன. அந்த திரைப்படத்தின் கதை எங்கோ திருடப்பட்ட கதை என்றும் அதை கொண்டுதான் அவர் திரைப்படத்தை எடுத்தார் என்றும் பெரும் சர்ச்சை உண்டானது .

Pradeep Ranganathan
அப்பொழுது அதில் இயக்குனர் பாக்கியராஜ் தலையிட்டு அந்த பிரச்சனையை பார்க்கும் பொழுது உண்மையாகவே பிரதீப் ரங்கநாதன் படத்தின் கதையை திருடிய படமாக்கிவிட்டது தெரிந்திருந்தது.
இரண்டாவது படமும் காப்பி:
பாக்யராஜ் இதுக் குறித்து ஒரு பேட்டியில் கூறும் பொழுது பொதுவாக கோமா நிலைக்குப் போய் திரும்ப பல வருடங்களுக்கு பிறகு எழுந்திருப்பது என்பது ஒரு கான்செப்ட்தான், ஆனால் பிரதீப் ரங்கநாதன் அந்த திரைகதையை அப்படியே காப்பி அடித்துதான் படமாக எடுத்திருந்தார் என்று கூறியிருந்தார்.

Love Today
ஆனால் அதற்குப் பிறகு வந்த லவ் டுடே திரைப்படம் கூட காப்பி அடித்த திரைப்படம்தான் என்று கூறப்படுகிறது. இதுக்குறித்து செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு கவிதையின் கருதான் இந்த லவ் டுடே திரைப்படத்தின் கதை என அவர் கூறுகிறார்.
காதலனும் காதலியும் தங்களது செல்போனை மாற்றிக் கொண்டால் என்ன ஆகும் என்று அந்த கவிதையில் எட்டு வரிகளில் பேசியிருப்பார் கவிஞர் அறிவுமதி. அதுதான் இந்த படத்தின் ஒன்லைன் என்று கூறுகிறார் செய்யாறு பாலு. எனவே இதுவும் காப்பி படம்தான் என கூறப்படுகிறது.