டிரைவர் ஜமுனா தள்ளிப்போனதுக்கு முக்கிய காரணம் இவர்தான்?? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்…
ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் “டிரைவர் ஜமுனா”. இத்திரைப்படத்தை கின்ஸ்லின் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “வத்திக்குச்சி” என்ற திரைப்படத்தை இயக்கியவர்.
தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாரா, ஜோதிகா ஆகியோருக்குப் பிறகு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.“மோ”, “கனா”, “பூமிகா” போன்ற பல திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்துதான் தற்போது “டிரைவர் ஜமுனா” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி கூட அறிவிக்கப்படாமல் தள்ளிப்போனது.
இந்த நிலையில் “டிரைவர் ஜமுனா” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: “நான் நல்லா நடிக்கிறேனா?”… இயக்குனரிடம் டவுட்டு கேட்ட உதயநிதி… அதுக்காக இப்படி ஒரு பதிலா வரணும்??
“டிரைவர் ஜமுனா” திரைப்படம் தள்ளிப்போனதற்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்தான் காரணம் என தெரியவந்துள்ளது. அதாவது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டூடே” திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதனால் “டிரைவர் ஜமுனா” திரைப்படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். ஆதலால்தான் இத்திரைப்படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்துள்ளதாக சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.