More
Categories: Cinema News latest news

ஆர் ஜே பாலாஜி கதையை காப்பி அடித்த லவ் டூடே இயக்குனர்?? அதே சீன் அப்படியே இருக்குதே!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டூடே” திரைப்படம் எதிர்பாராவிதமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன் இயக்கிய “கோமாளி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், “லவ் டூடே” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.

Love Today

அந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனினும் ஒரு நடிகராக பிரதீப்பை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் “லவ் டூடே” திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த சந்தேகங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது.

Advertising
Advertising

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய “எல் கே ஜி” திரைப்படத்தின் ஒரு காட்சியை அடிப்படையாக வைத்துத்தான் “லவ் டூடே” திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் உருவாக்கியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “எல்லா சீன்லயும் ஒரே மாதிரியே ரியாக்சன் கொடுக்குறாரே”… தெலுங்கு சூப்பர் ஸ்டாரை கலாய்த்த ஜெயம் ரவி??

LKG movie

அதாவது “எல் கே ஜி” திரைப்படத்தில் ஒரு காட்சியில் கவுன்சிலராக இருக்கும் ஆர் ஜே பாலஜியிடம் ஒரு காதல் ஜோடியை பிரித்து வைக்க வேண்டும்  என அவர்களது பெற்றோர்கள் முறையிடுவார்கள். அப்போது ஆர் ஜே பாலாஜி அந்த இளம்பெண்ணின் மொபலை வாங்கி ஆணுக்கும், அந்த ஆணின் மொபைலை வாங்கி அந்த பெண்ணுக்கும் கொடுப்பார்.

“உங்கள் லவ் பார்ட்னரின் மொபைலில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், போன்றவற்றை இரவு முழுவதும் பயன்படுத்தி பாருங்கள். அப்படியும் நீங்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பதாக இருந்தால் அடுத்த நாள் என்னிடம் வாருங்கள்” என கூறுவார்.

Love Today

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “லவ் டூடே” திரைப்படத்திலும் கதாநாயகியின் தந்தையான சத்யராஜ், இதே போன்றுதான் ஒருவருக்கொருவர் மொபைலை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறுவார். அதில் இருந்துதான் அத்திரைப்படத்தின் கதையே தொடங்கும். இதன் மூலம் “எல் கே ஜி” திரைப்படத்தின் காட்சியை அடிப்படையாக வைத்து ஒரு முழு திரைப்படத்தையும் பிரதீப் ரங்கநாதன் உருவாக்கியுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. எனினும் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “ஆப் லாக்” என்ற குறும்படத்தைத்தான் “லவ் டூடே” திரைப்படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts