Cinema News
லவ் டுடே படம் பார்த்த துர்கா ஸ்டாலின்!..அம்மாவின் முடிவால் ஆடிப்போன உதய நிதி!..
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த “லவ் டூடே” திரைப்படம் எதிர்பாராவிதமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன் இயக்கிய “கோமாளி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், “லவ் டூடே” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.
இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் திரையங்கில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது லவ் டுடே திரைப்படம். இந்த நிலையில் இந்த திரைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் பார்த்திருக்கிறார். பார்த்து விட்டு உதயநிதியிடம் படம் சூப்பராக இருக்கிறது.
இதையும் படிங்க : மாஸ் ஹீரோனா பெரிய இதா?..வாரிசு, துணிவு பட ரிலீஸ் பற்றி நிருபரிடம் டென்ஷனான உதயநிதி!..
இந்த படத்தை நீ தான் வாங்கிருக்க போல, இன்னும் வேற எதாவது படங்கள் வாங்கி ரிலீஸ் செய்திருக்கிறாயா என்று கேட்க இந்த படத்துடன் வெளியான காஃபி வித் காதல் படத்தையும் நான் தான் வாங்கியிருக்கிறேன் என கூறினாராம்.இதை கேட்ட ஸ்டாலின் தமிழ் சினிமாவில் உள்ள எல்லா படங்களையும் நீ தான் வாங்கிக்கிட்டு இருக்க போல என கிண்டலாக கூறினாராம்.
இதையும் படிங்க : எதாவது வச்சி மூடும்மா..பாக்கவே கூச்சமா இருக்கு!…ஓப்பனா காட்டி அதிரவிட்ட நடிகை…
அதன் பின் உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் இந்த படத்தை பற்றி பேசுகையில் ‘ நீயும் உன் அப்பாவும் உங்க ஃபோனை கொடுங்கள், நானும் கிருத்திகாவும் மாற்றிக் கொள்கிறோம்’என கூற உதயநிதி ‘ஐய்யய்யோ வேண்டாம்’ என பயந்தாராம். இதை உதயநிதி விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.