காதலர்கள் கொண்டாடும் வெற்றி!.. 2ம் நாளில் அதிகரித்த லவ்வர் வசூல்!.. இந்த வாரம் வின்னர் இதுதான்!..

லால் சலாம் படத்தில் கேமியோவாக நடிக்க ரஜினிகாந்துக்கே 40 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், மொத்த பட்ஜெட் 50 கோடி என இருந்தாலே அந்த படம் 10 கோடி முதல் 15 கோடி தான் வசூல் செய்யும் என தெரிகிறது.

அதே நேரத்தில் 5 கோடி பட்ஜெட்டில் உருவான மணிகண்டனின் லவ்வர் படம் குட் நைட் போலவே பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி இந்த லவ்வர்ஸ் டே வின்னராக மாறியிருக்கிறது.

இதையும் படிங்க: அப்பாவோட மாஸ மொத்தமா சரித்து விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!.. 2ம் நாளில் காலியான லால் சலாம்!..

லிவ்வின் எனும் வெப்சீரிஸை இயக்கிய பிரபுராம் வியாஸ் பல ஆண்டுகள் போராடி இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். கிடைத்த சான்ஸை மிஸ் செய்து விடக் கூடாது என நினைத்த அவர் மணிகண்டனை வைத்து காதலர்களின் பிரச்சனைகள், அதற்கான தீர்வு உள்ளிட்ட விஷயங்களை வைத்து யூத் ஆடியன்ஸை லவ்வர்ஸ் டேவுக்கு சரியாக டார்கெட் செய்து அடித்துள்ளார்.

முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூல் செய்த லவ்வர் திரைப்படம் 2ம் நாளில் பாசிட்டிவான விமர்சனங்கள் காரணமாக 1.8 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு போனா என்ன!.. இருக்கவே இருக்கு.. ஜெயம் ரவி சொன்ன ஐடியாவ பாருங்க!..

ஒட்டுமொத்தமாக 2.8 கோடி ரூபாய் வசூலை லவ்வர் திரைப்படம் ஈட்டியுள்ளது. ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் 4 கோடி வசூலை ஈட்டிய நிலையில், இரண்டாம் நாளில் 3 கோடியாக சரிந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பிப்ரவரி 14ம் தேதியும் லவ்வர் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதிகபட்சமாக இந்த படம் 10 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story