கவினுக்கும் எனக்கும் மட்டும் போட்டி வேண்டாம்!.. லவ்வர் ஹீரோ மணிகண்டன் சொன்ன சூப்பர் விஷயம்!..
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே இரண்டு முன்னணி நடிகர்களின் போட்டி தான் அதிகமாக நிலவி வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இன்னமும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே போல அஜித், விஜய் போட்டி நிலவி வந்த நிலையில், அவர்களுக்குப் பின் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக கவினுக்கும் மணிகண்டனுக்கும் இடையே தான் போட்டி என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா மற்றும் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையும் படிங்க: 3 வருஷத்துக்கு ஒருமுறை பிரஸ்மீட் வைப்பேன்னு சொன்ன அஜித்!.. பல வருஷமா வைக்காதது ஏன்?..
இந்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படம் வெளியாகிறது. அதனை முன்னிட்டி பேட்டிகள் கொடுத்து வருகிறார் மணிகண்டன். சமீபத்தில் அளித்த பேட்டியில், உங்களுக்கும் கவினுக்கும் போட்டின்னு சொல்றாங்களே என்கிற கேள்விக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்த 2 நடிகர்கள் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது.
ஆனால், அது அப்படி இருக்கக் கூடாது. 200க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் படங்களை இயக்க போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். 10 ஹீரோக்கள் தான் இருக்கின்றனர். அதிலும், 2 கணக்கு வந்தால் நல்லா இருக்குமா? ஒரு 40 ஹீரோவாவது தமிழ் சினிமாவில் ஷைன் ஆக வேண்டும். பலருடன் போட்டிப் போட வேண்டும். அப்போதுதான் சினிமா வளர்ச்சி அடையும். நல்ல கதைகளை வைத்திருக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: 10 வருஷமா என் நண்பருக்கு படமே ஓடல!.. ஜெயிலர் பார்த்துட்டு வயித்தெரிச்சல்.. ரஜினி சொன்ன நடிகர் யார்?