Biggboss Tamil 8: என்னடா நடக்குது இங்க!.. மழையில் ஆட்டம் போடும் காதல் பறவைகள்.. வீடியோ பாருங்க!..

by சிவா |   ( Updated:2024-11-09 04:51:26  )
soundarya
X

#image_title

Biggboss Tamil: வீட்டில் இதுவரை ஒரு காதல் பூ பூக்கவில்லை. பூ என்ன பூ துளிர் கூட விடவில்லை என இலவு காத்த கிளியாக பிக்பாஸ் தவித்து வருகிறார். கடந்த ஏழு சீசன்களிலும் காதல் ஜோடி இருந்ததால் எவ்வளவு மோசமாக நிகழ்ச்சி சென்றாலும் டிஆர்பிக்கு குறைவில்லை.

ஆனால் இந்த சீசனில் எவ்வளவு கண்டெண்ட் இருந்தாலும் அந்த காதல் டச்சிங் மிஸ் ஆகிக்கொண்டே செல்கிறது. இதனால் பிக்பாஸின் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. இத்தனைக்கும் இளமை ஊஞ்சலாடும் போட்டியாளர்களாக சல்லடை போட்டு சலித்து உள்ளே அனுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: தக் லைஃப்ல கமல் செய்த மேஜிக்… விஸ்வரூபமா, குருதிப்புனலா? இப்படி தெறிக்க விடுறாரே!

சின்னதாக ஒரு ரொமான்ஸ், ஒரு புரொபோஸ் என ஒரு கண்ட்ராவியும் கிடையாது. இதனால் பார்வையாளர்களும் ஏதோ போனால் போகிறது என்ற ரேஞ்சில் தான் இந்த சீசனை டீல் செய்கின்றனர். இந்தநிலையில் பிக்பாஸ் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு ஒரு சின்ன ரொமான்ஸ் நடந்துள்ளது.

ஜோடி யாரென்று கேட்டால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள். விஜே விஷால் -சவுந்தர்யா தான் அந்த ஜோடி. இருவரும் ஒருவரை முறைத்துக் கொண்டும், கழுவி ஊற்றிக் கொண்டும் இதுநாள் வரை இருந்தனர். அவ்வளவு ஏன் நேரடி நாமினேஷனில் கூட இருவரும் மாற்றி, மாற்றி நாமினேட் செய்து கொண்டனர். நிலைமை இப்படி இருக்க மழையில் நனைந்து இருவரும் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள், 'அப்போ இத்தனை நாள் சண்டை போட்டுக்கிட்டது எல்லாம் போங்காட்டமா பாஸ்' என இருவரையும் கழுவி ஊற்றி வருகின்றனர். எது எப்படியோ பிக்பாஸிற்கு கண்டெண்ட் கிடைத்தால் சரி.

Next Story