Cinema News
நீங்க காதல் வலையில விழுந்துட்டிங்களா? – அப்ப நீங்க கட்டாயம் கேட்க வேண்டிய காதல் பாடல்கள்!..
காதல் என்ற வார்த்தையை கேட்டதுமே பூக்கள் கூட மெல்லிசையில் ஆடுமாம். காதல் வந்துவிட்டால் நம் கண்கள் அவள் கண்களோடு பேசும் அழகை என்னவென்று சொல்வது. காதல் கண்களில் தொடங்கி கண்ணீரில் முடியும் என்று சில கவிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் காதல் வந்துவிட்டால் உலகமே அவர்கள் உள்ளங்கையில் அடங்கி விடும் என்றால் அதிசயம் தானே.
எனக்கு நீ உனக்கு நான் என்ற புது உறவு பூத்து நிற்கும் போது ஏற்படும் உணர்வுகளை வார்த்தையால் விவரிக்கவே முடியாது. அப்படிப்பட்ட காதல் வந்துவிட்டால் நமது மனதை மேலும் வசியம் செய்யும் பழைய தமிழ் திரைப்படப் பாடல்களைப் பற்றி பார்க்கலாம்.
என்ன நினைத்தாய் நீ என்ன நினைத்தாய் என்னை உன் நெஞ்சு குழியில் வைத்தபோது என்ற பாடல் வரிகளில் இருந்து நாம் ஆரம்பிக்கலாம். மேலும் ஜெமினி படத்தில் வரும் என் கண்ணை கொஞ்சம் உற்றுப் பார் என்ற பாடல் வரிகள் மிகவும் அருமையான காதலை சொல்லக்கூடிய வரிகள்.
அதுபோலவே வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்ணிலாவே. இவையெல்லாம் அக்கால காதலை உணர்த்திய அருமையான பாடல்கள்.இந்த பாடலைக் கேட்கும்போதே மனதில் நமக்கும் காதல் பிறக்கும்.
ஆனால் இன்றைய காதல் எப்படிப்பட்டது என்று பார்த்தால் ஒரு குறுஞ்செய்தியில் காதலை வெளிப்படுத்தி ஒரு மாலையில் சந்தித்து இன்னொரு இரவின் முடிவில் பல காதல்கள் நீர்த்துப் போவதைப் பார்க்க முடிகிறது.
90களில் இளையராஜா அமைத்த இசையில் கேட்கத் தூண்டும் காதல் பாடல்கள் வா வா அன்பே ,காதல் நெஞ்சே நெஞ்சே போன்ற பாடல்கள் மூளைக்குள் காதலை உறைய வைக்கும் தன்மையுடன் இருந்தது.
அதே போல் காதல் ஓவியம் பாடும் காவியம் என்ற வரிகளில் அமைந்த பாடல் நம் நினைவுகளை மடைமாற்றம் செய்துவிடும். ஏதோ ஒரு தூர தேசத்தில் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ள நம்மை செய்துவிடும்.
அது போலவே காதல் தீபம் ஒன்று என்ற பாடல் காதலர் தினத்துக்கு மட்டுமல்ல காதலை சொல்லும் போதே நினைவுகளில் இருந்து மேலெழுந்து வந்து விடும்.
இதுவரை காதலிக்காதவரை கூட காதலிக்க வைக்கும் வளையோசை கலகலவென தொடங்கும் பாடலை கேட்டு விட்டால் காதல் பற்றி எதிர்ப்புணர்வு உடையவர்கள் கூட இதனை ரசிப்பார்கள்.
காதலை உணர்த்தக்கூடிய பாடல் வரிகள் பூந்தளிராட எனத்தொடங்கும் கீதம். ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நீ தானே என் பொன்வசந்தம் என்ற பாடல். காதலில் நனைந்து வாழும் காதலர்கள் இந்தப் பாடலைக் கேட்கும்போது ஒவ்வொருவரின் உண்மையான காதலை உணர்வார்கள்.