சின்ன பட்ஜெட்டில் பல கோடி லாபம்!. ரஜினி - கமலையே அதிரவைத்த கேப்டனின் டாப் 5 திரைப்படங்கள்!..
ரஜினி, கமல் கோலோச்சிய 80களிலேயே தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். பெரும்பாலும் கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில்தான் நடித்தார். அதோடு, துவக்கம் முதலே ஆக்ஷன் கதைகளிலேயே அதிகம் நடித்தார். 90களில் ரஜினி படங்களை போலவே விஜயகாந்த் படங்களும் வசூலில் சக்கை போடு போட்டது. என்னுடைய வசூலை விஜயகாந்தால் மட்டுமே தாண்ட முடியும் என ரஜினியே சொல்லி இருக்கிறார்.
அப்படி குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற 5 விஜயகாந்த் திரைப்படங்கள் பற்றி இங்கு பார்ப்போம். ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 3.50 கோடி செலவில் உருவான திரைப்படம்தான் சின்னக் கவுண்டர். இந்த படத்தில் விஜயகாந்துடன் சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் உலக அளவில் 20 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: அரைவேக்காடு அரசியல்வாதி விஜய்! வலைப்பேச்சு பிஸ்மியின் கருத்துக்கு சரியான பதிலடி கொடுத்த தளபதி
4வது இடத்தில் உதய் சங்கர் இயக்கத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த தவசி திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். வில்லனாக நாசர் மற்றும் பொன்னம்பலமும், காமெடியனாக வடிவேலுவும் கலக்கி இருந்தார்கள். 6 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் 29 கோடி வரை வசூல் செய்தது.
3வது இடத்தில் இருப்பது மலையாள இயக்குனர் சித்திக் இயக்கிய எங்கள் அண்ணா. இந்த படத்தில் விஜயகாந்துடன் பாண்டியராஜன், வடிவேலு, பிரபுதேவா, நமீதா என பலரும் நடித்திருந்தனர். 7 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் உலக அளவில் 32 கோடியை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: சிவாஜி எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்!.. ஒய்.ஜி.மகேந்திரன் சொன்ன சூப்பர் தகவல்..
2வது இடத்தில் விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான வானத்தை போல திரைப்படம் இருக்கிறது. இப்படத்தில் லிவிங்ஸ்டன், பிரபுதேவா, மீனா, செந்தில் என பலரும் நடித்திருந்தனர். 6 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் 36 கோடி வரை வசூல் செய்தது.
முதலிடத்தில் இருப்பது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமணா திரைப்படம். 7 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 42 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்தது. எனவே, இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு விஜயகாந்த் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.