அஜித் வாங்கிய ஆடம்பர ரேஸ் கார்... 3 நொடியில் 100 கி.மீ. வேகம்... எத்தனை கோடி தெரியுமா...?
நடிகர் அஜித் வாங்கி இருக்கும் புதிய ரேஸ் காரின் விலை தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. அதனை தொடர்ந்து விடாமமுயற்சி திரைப்படத்தில் விடாமல் நடித்து வருகின்றார். இருப்பினும் இந்த திரைப்படம் முடிந்த பாடே காணோம்.
இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாக இருப்பதாக கூறி வருகிறார்கள். விடாமமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது. மேலும் மகிழ்த்திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாக இருப்பதாக கூறி வருகிறார்கள். ஆக மொத்தம் இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் முதலில் வெளியாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சினிமாவை தாண்டி அஜித்குமாருக்கு பைக் மற்றும் கார் மீது அலாதி பிரியம். அவ்வபோது தனது பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் டூர் சென்று விடுவார்.
அதே போல் விதவிதமாக கார்களை வாங்கி அடுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் துபாயில் 9 கோடி மதிப்புள்ள சிவப்பு நிற பெராரி கார் ஒன்றை வாங்கியிருந்தார். இடைத்தொடர்ந்து தற்போது அஜித் புது சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். அதாவது போர்ச் GT3 RS ரக காரினை வாங்கியிருக்கின்றார். இதன் மதிப்பு நான்கு கோடி ரூபாய் ஆகும்.
இந்த கார் முழுக்க முழுக்க ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் பின்புறத்தில் ரெக்கை போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இது டிஆர்எஸ் என்று அழைக்கப்படும் ஃபார்முலா ஒன்றின் மாடல் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.2 கடந்து விடும். 296 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கார் தான் முதலிடம் வகிக்கின்றது.
இத்தகைய ஸ்பெஷலான காரை நடிகர் அஜித் தனக்கு சொந்தமாக்கி இருக்கின்றார். மேலும் நடிகர் அஜித் கார் வாங்கிய புகைப்படத்தை அவரின் மனைவி ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் மற்றும் இந்த கார் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.