மீண்டும் இணையும் மணிரத்னம் சிம்பு - கூட்டணி!.. மணி சார் போட்ட ஒரே கண்டிஷன்!..

by Rohini |   ( Updated:2025-05-03 06:36:40  )
str
X

Simbu: தற்போது சிம்பு தக் லைப் திரைப்படத்தை முடித்துள்ள நிலையில் அடுத்ததாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவருடைய 49வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கையாடு லோகர் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சந்தானம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது சிம்பு தான். அந்த ஒரு நன்றி கடன் சந்தானம் மனதில் எப்பொழுதுமே இருக்கும்.

அதனால் இதுவரை எந்த நடிகருடனும் சேர்ந்து நடிக்காத சந்தானம் இப்போது மீண்டும் சிம்புவுடன் இந்த படத்தில் இணைய இருக்கிறார். ஹீரோவாகவே நடித்து வந்த சந்தானம் இந்த படத்தில் எப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் நடிக்கப் போகிறார்? காமெடியனாக நடிக்க போகிறாரா அல்லது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டா என்பது தெரியவில்லை, இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவருடைய 50ஆவது படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51 வது படத்திலும் நடிக்க இருக்கிறார் ,

இப்படி சிம்புவின் லைன் அப் அடுத்தடுத்து இருக்க இன்னொரு ஒரு புதிய படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகி இருக்கிறது. மீண்டும் சிம்புவை வைத்து மணிரத்னம் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில் பொருளாதார நெருக்கடியில் இருந்த லைக்கா இனிமேல் படங்களை தயாரிக்காது என செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை நாங்கள் படங்களை தயாரிப்போம் என மீண்டும் புது முயற்சி எடுத்து இருக்கிறதாம் லைக்கா.

ஏற்கனவே ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் ஒரு படத்தையும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் ஒரு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் மூன்று வருடங்களில் 9 படங்களை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் ரஜினி, கமல் ,சிவகார்த்திகேயன், சிம்பு என பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை தயாரிக்க போகிறார்களாம்.

இப்போது ஹீரோக்களை நம்பாமல் கதைகளை நம்பி படத்தை தயாரிக்கும் முயற்சியில் லைக்கா இறங்கி இருக்கிறதாம். அதனால் சிம்புவை வைத்து எடுக்கும் இந்த படத்தை மணிரத்தினம் இயக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது .மணிரத்தினம் இந்த படத்திற்கு 100 கோடி பட்ஜெட் என சொல்லி இருக்கிறாராம் .இந்த பட்ஜெட்டிற்கு சம்மதம் சொன்னால் தான் லைக்கா தயாரிப்பில் மணிரத்தினம் சிம்புவை வைத்து அந்த படத்தை எடுப்பார் இல்லை எனில் வேறு இயக்குனர்கள் இந்த படத்தை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Next Story