ஏகே - 62 டேக் ஆஃப் ஆக கடைசி சான்ஸ்!.. மகிழ்திருமேனிக்கு கெடு விதித்த லைக்கா நிறுவனம்!..
திடீரென அஜித்தின் படத்திற்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்படி வாரிசு , துணிவு ஆகிய படங்கள் ஆரம்பிக்கப்பட்ட வேகத்தில் திரையில் ஒன்றாக மோதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதே விறுவிறுப்பில் இருவரின் அடுத்தப் படங்களும் தீபாவளிக்கு மோதும் என்று ஆவலாக எதி ர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இடையே பெரிய கீறல் ஒன்று விழுந்து ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தன. இன்னொரு பக்கம் சொன்னப்படி தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வேகமாக முதல் செட்யூலை முடித்து அடுத்த செட்யூலுக்காக காஷ்மீர் வரை சென்று விட்டது.
அது சம்பந்தமான புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது. இந்தப் பக்கம் விக்னேஷ் சிவன் ஏகே 62 பஞ்சாயத்து முடிந்த மாதிரி தெரியவில்லை. இதனிடையில் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலக்கப்பட்டாலும் நயன் இன்னும் லண்டனில் சுபாஸ்கரனுடன் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறாராம்.
இந்தப் படம் போனால் பரவாயில்லை ஏகே 63 படத்தை எடுக்கப்போவதாக அறிவித்து விடுங்கள் என்று லைக்கா நிறுவனத்திடம் கேட்டுகொண்டிருக்கிறாராம். ஆனால் சுபாஸ்கரன் வரிசையாக லைனப்பில் நிறைய படங்கள் இருப்பதால் முடியாது என்று சொல்லிவிட்டனராம்.
இதனிடையில் மகிழ் திருமேனியிடம் கதை ஏதாவது இருக்கிறதா என்று கேட்க அவர் ஏதோ ஒரு ஒன் லைன் கதையை சொல்ல அது அஜித்திற்கும் லைக்காவிற்கும் பிடித்து விட்டதாம். ஆனால் இதே தப்பு தான் விக்னேஷ் சிவன் விஷயத்திலும் நடந்திருக்கிறது. முதலில் ஒன் லைன் சொல்லி கால்ஷீட் வாங்கிய விக்கி முழு ஸ்கிரிப்ட்டில் கோட்டை விட்டிருக்கிறார்.
அது போல் இப்பொழுது நடந்து விடக்கூடாது என்பதற்காக மகிழ் திருமேனிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருக்கிறார்களாம். அதற்குள் ஏகே 62 படத்தின் மொத்தக் கதையையும் தயார் செய்து வருமாறு கூறியிருக்கிறார்கள். என்ன பண்ணப் போகிறார் மகிழ் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : பிறந்தநாள கொண்டாடக் கூடாதா?.. பிரசாந்த் – அஜித் புகைப்படத்தால் வந்த பிரச்சினை!..