தக் லைஃப் கையில்தான் இந்தியன் 3ன் ரிலீஸ்… இது செம கிளாஷா இருக்கே..!

Published on: September 17, 2024
thug life indian3
---Advertisement---

உலகநாயகன் கமல், மணிரத்னம் காம்போ 38 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தக் லைஃப் படத்தில் இணைகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்றே தெரிகிறது. கமலுடன் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் இந்தப் படம் இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்திற்கான சூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. படம் பொங்கலுக்குள் திரைக்கு வரும் என்று தெரிகிறது. அதே போல இந்தியன் 3 படமே இந்தப் படத்திற்காகத் தான் வெயிட்டிங்காம். வலைப்பேச்சு குழுவினர் இதைப் பற்றி என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா…

தக் லைஃப் பார்த்தீங்கன்னா டிசம்பர் 20ன்னு முதல்ல சொன்னாங்க. விசாரிக்கிறப்ப ஜனவரி 10ன்னு சொல்றாங்க. இப்ப கொஞ்ச நாளா இந்தப் படம் ஏப்ரலுக்குத் தள்ளிப் போக வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. இன்னைக்கு சிக்கல் என்னன்னா படத்தை முடிக்கிறது பெரிய விஷயமல்ல. பான் இண்டியா படம்னா 3 மொழிகளிலும் பார்க்க வேண்டியுள்ளது. அங்க என்ன படம் வருது? இங்க என்ன படம் வருதுன்னு எல்லாம் பார்க்கணும்ல. அதே கதை தான் கங்குவாக்கும்.

vettaiyan
vettaiyan

இந்தப் படம் ஏப்ரலுக்குத் தள்ளிப் போச்சுன்னா அதுக்கு அப்புறம் தான் இந்தியன் 3ஐக் கொண்டுவர முடியும். அதனால தக் லைஃப் படத்தைப் பொருத்தவரைக்கும் கமல் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்குறாங்களோ அதை விட அதிகமா லைகா நிறுவனம் எதிர்பார்த்து வருகிறது என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

கமல், ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் லைகா நிறுவனம் ரொம்பவே சோர்ந்து போனது. இனி வேட்டையனைத் தான் நம்பி உள்ளது.

Also read: தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ? விழி பிதுங்கி நிற்கும் ஜேசன் சஞ்சய்

இந்தப் படத்தின் வெற்றி லைகாவிற்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்றே தெரிகிறது. தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தியன் 3 படம் இந்தியன் 2 போல் சொதப்பிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது. இதற்காக படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்கிறார்களாம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.