எங்களுக்காடா எண்ட் கார்டு போடுறீங்க!. மெகா பிளானோடு களமிறங்கும் லைக்கா!…

by சிவா |   ( Updated:2025-05-02 23:07:34  )
lycaa
X

இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் செல்போன் சிம்கார்ட் உள்ளிட்ட சில வியாபாரங்கள் இருக்கிறது. சினிமாவில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற ஆசை வரவே லைக்கா என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கினார். முதல் படமே விஜயை வைத்து கத்தி படம் எடுத்தனர். அப்போது இலங்கை படுகொலையில் தமிழர்கள் பலரும் உயிரிழந்த நேரம். எனவே, இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பும் வந்தது.

அதையெல்லாம் சமாளித்து தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வந்தது இந்நிறுவனம். துவக்கத்தில் சின்ன பட்ஜெட்டுகளில் படமெடுத்து வந்த லைக்கா ஒரு கட்டத்தில் பெரிய நடிகர்களை வைத்து அதிக பட்ஜெட் படங்களை எடுக்க துவங்கியது. ஆனால், விஜய் மட்டும் கத்தி படத்திற்கு பின் இந்த நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.

எனவே, ரஜினி, அஜித், சிம்பு, விஷால் போன்ற நடிகர்கள் பக்கம் போனார்கள். சில படங்கள் வெற்றி என்றாலும் கடந்த 5 வருடங்களில் இந்த நிறுவனம் தயாரித்த பல படங்கள் தோல்வி அடைந்தது. ரஜினியின் தர்பார், கமலின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி போன்ற படங்கள் லைக்காவுக்கு லாபம் கொடுக்கவில்லை. இடையில் பொன்னியின் செல்வன் மட்டுமே லாபம் கொடுத்தது. அதேபோல், ரஜினியை வைத்து எடுத்த வேட்டையன்,. லால் சலாம் போன்ற படங்களும் ஓடவில்லை.

இப்படி தொடர் தோல்வியை கொடுத்ததால் லைக்கா நிறுவனம் இனிமேல் சினிமா தயாரிக்கும் தொழிலை கைவிடுகிறார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால், இப்போது வரும் செய்திகள் வேறு மாதிரி இருக்கிறது. இனிமேல்தான் அதிரடியாக களம் இறங்க முடிவெடுத்திருக்கிறதாம்.

ரஜினி, அஜித், சிம்பு உள்ளிட்ட பெரிய நடிகர்களை வைத்து அடுத்த 3 ஆண்டுகளில் 9 படங்களை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம். மும்பையில் உள்ள மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் என்கிற நிறுவனத்துடன் இணைந்து 1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவிருக்கிறார்களாம். ஒருபக்கம் இந்தியன் 3 படத்தையும் விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Next Story