Connect with us

Cinema News

Lyca: பெரிய நடிகர்களின் ஆதரவை இழக்கும் லைக்கா!.. இப்படியே போனா இழுத்து மூட வேண்டியதுதான்!..

Lyca: தமிழ் திரையுலகில் பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் நிறுவனம்தான் லைக்கா. இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இந்த அலுவலகத்தின் தலைமையிடம் லண்டனில் இருக்கிறது. லண்டனில் தங்கியிருக்கும் சுபாஷ்கரனுக்கு சினிமா இல்லாமல் மொபைல் நெட்வொர்க் உள்ளிட்ட வேறு சில தொழில்களும் இருக்கிறது.

லைக்கா நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் இது. சுபாஷ்கரன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் கத்தி படம் வெளியானபோது இங்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அந்த படம் வெற்றி அடையவே லைக்கா நிறுவனம் கோலிவுட்டில் காலூன்றியது.

கார்ப்பரேட் நிறுவனமான லைக்கா புரடெக்‌ஷன் பெரிய நடிகர்களை வைத்து அதிக பட்ஜெட்டுகளில் படங்களை தயாரிக்க துவங்கியது. கோலமாவு கோகிலா, வட சென்னை, ரஜினியின் 2.O, தர்பார், டான், பொன்னியின் செல்வன், இந்தியன் 2 ஆகிய படங்களை தயாரித்தது.

ரஜினியை வைத்து தர்பார், லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்களை தயாரித்தது லைக்கா. அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை தயாரித்து வருகிறது. பெரிய நடிகர்களை வைத்து படமெடுத்தாலும் அவர்களுடன் சுமூக உறவை லைக்கா தொடரவில்லை என்றே சொல்லப்படுகிறது.

கத்தி படத்திற்கு பின் லைக்காவுக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை. வேட்டையன் படத்தில் ரஜினிக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டு, ‘சம்பள பாக்கியை கொடுத்தால் மட்டுமே டப்பிங் பேசுவேன்’ என ரஜினி அடம்பிடிக்க, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதில் தலையிட்டு அந்த பணத்தை கொடுத்தது.

lycaa

விடாமுயற்சி படம் உருவானபோது பணம் இல்லாமல் படப்பிடிப்பு பல நாட்கள் நின்றது. இதனால் அஜித்தும் கோபமடைந்தார். இனிமேல் அஜித் லைக்காவுக்கு கால்ஷீட் கொடுக்கவே மாட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ரஜினி என்ன செய்யப்போகிறார் என தெரியவில்லை. ஏற்கனவே, தர்பார், லால் சலாம், வேட்டையன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

ஒருபக்கம், பெரிய நடிகர்களின் கோபத்திற்கும் லைக்கா ஆளாகி வருவதால் அந்நிறுவனம் என்னவாகும் என தெரியவில்லை என்கிறார்கள் சிலர். சிலரோ ‘பெரிய நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே கொடுக்க முடியும். எனவே, அவர்களை விட்டாலும் நடிகர்களுக்கு வேறு வழியில்லை’ என்கிறார்கள்.

அதுவும் சரிதான்!…

இதையும்  படிங்க: Amaran: ரஜினி படத்தையே ஓவர்டேக் பண்ண அமரன்?!… 10 நாளில் எகிறிய எஸ்கே-வின் மார்க்கெட்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top