பணம் மட்டும் போதாது.! அறிவும் வேண்டும்.! கத்தி தயாரிப்பாளரின் மோசமான நிலை.!

தமிழ் சினிமாவில் பல முக்கிய தயாரிப்பாளர்கள் அனுபவசாலிகள் தற்போது படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டனர். காரணம் பல கூறப்பட்டாலும், தற்போது சினிமா தயாரிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், கதயக்கர்களிடமும் சிக்கிவிட்டது. அதானல், பலர் தயாரிப்பை விட்டுவிட்டனர்.

அதனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போதிய சினிமா அனுபவமும், சினிமா அறிவும் இருப்பது கிடையாது. இதனால், சுமாரான கதைக்களத்திற்கு கூட அதிக செலவு செய்து ஆடம்பரமாக விளம்பரம் செய்து போதிய வருமானம் கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

அப்படி ஒரு நிறுவனம் தான் லைகா. வரும் போதே தளபதி விஜய் நடிப்பில் உருவான கத்தி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியுடன் தொடங்கினர். ஆனால், அடுத்தடுத்து வெளியான எனக்கு இன்னோர் பேர் இருக்கு, எமன், இப்படை வெல்லும், தியா போன்ற படங்களை தயாரித்து நஷ்டத்தை சந்தித்தது.

இதையும் படியுங்களேன் - என்னய்யா மூஞ்சில எந்த ரியாக்ஸனும் இல்லையே.! இதுதான் யுவன் ஸ்டூடியோவில் நிலைமை.!

அதன் பின்னர் பெரிய ஹீரோக்களை நம்பி 2.O, தர்பார், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களையும் தயாரித்தது. ஆனால், அந்த திரைப்படங்களுக்கும் அதிகமாக செலவு செய்ததால், போதிய லாபம் கிடைக்கவில்லை.

தற்போது லைகா தயாரிப்பில் டான், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இந்த திரைப்படமாவது லைகா நிறுவனத்திற்கு அதிகளவு லாபத்தை தருகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Related Articles

Next Story