இப்ப தக் லைப்!.. நெக்ஸ்ட் இந்தியன் 3!… ஃபிளாப் கொடுத்தும் அசராத லைக்கா!…

by சிவா |   ( Updated:2025-03-31 02:50:26  )
இப்ப தக் லைப்!.. நெக்ஸ்ட் இந்தியன் 3!… ஃபிளாப் கொடுத்தும் அசராத லைக்கா!…
X

Lyca Production: இலங்கையில் பிறந்து லண்டனில் செட்டிலானவர்தான் சுபாஷ்கரன். லண்டனில் பிரபலமான சிம் கார்டை விற்கிறது இவரின் நிறுவனம். சினிமா தயாரிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு லைக்கா புரடெக்‌ஷன் நிறுவனத்தை துவங்கினார் சுபாஷ்கரன். இந்த நிறுவனம் முதலில் தயாரித்த திரைப்படம் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி. இலங்கை இனப்படுகொலை தமிழகத்தில் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நேரம் என்பதால் இலங்கையை சேர்ந்த நிறுவனம் இங்கு படமெடுக்கக் கூடாது என எதிர்ப்பும் வந்தது.

ஆனால், பிரச்சனைகளை சமாளித்து கத்தி படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் பல படங்களையும் இந்நிறுவனம் தயாரித்தது. ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரிக்க துவங்கினார்கள். அதில், பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் லைக்கா நிறுவனம் தோல்வியை சந்திக்க துவங்கியது. ரஜினியின் தர்பார் மற்றும் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி போன்ற படங்கள் லைக்காவுக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படமும் ஓடவில்லை. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இந்த படத்தை இயக்கியிருந்தார். குறிப்பாக கமலின் இந்தியன் 2 படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.

விடாமுயற்சி படம் உருவானபோது லைக்கா நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் தள்ளிப்போனது. மேலும், இந்த படத்தில் லைக்காவுக்கு 150 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. தொடர் தோல்விகளை கொடுத்ததால் லைக்கா நிறுவனம் இனிமேல் அவ்வளவுதான். கம்பெனியை மூடப்போகிறார்கள் என்றெல்லாம் சினிமா வட்டாரத்தில் பேசினார்கள்.

thug life indian3
thug life indian3

பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவான எம்புரான் படத்திலும் லைக்கா நிறுவனம் முதலீடு செய்தது. ஆனால், சில பிரச்சனைகள் ஏற்பட்டு வேறு ஒருவருக்கு கை மாறியது. எனவே, இனிமேல் லைக்கா நிறுவனம் படமெடுக்குமா என்கிற சந்தேகமும் பலருக்கும் வந்தது. ஆனால், விட்டதை பிடிக்கும் முயற்சியில் லைக்கா இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

லைக்காவின் கையில் இப்போது இருப்பது இந்தியன் 3 மட்டுமே. தக் லைப் படம் வெளியான பின் இந்தியன் 3 படத்தை வெளியிட லைக்கா திட்டமிட்டிருக்கிறது. மேலும், இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்க திட்டமிட்டிருப்பதால் அதற்கான வேலைகள் வேகமாக நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

Next Story