More
Categories: Cinema News latest news

உதயநிதிக்கே செக் வைத்த லைகா.. ஐயா எங்ககிட்ட பணம் இல்ல.. இனி நீங்களே பாத்துக்கோங்க…

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 ஏதோ சில காரணங்களால் வருடங்கள் கடந்து தற்போது கிடப்பில் கிடக்கிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது.

Advertising
Advertising

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றி மீண்டும் லைகா நிறுவனத்தை இந்தியன் இரண்டாம் பாகம் பக்கம் திருப்பி உள்ளது. தற்போது இந்தியன்-2 உருவாகும் சூழல் உருவாக்கி உள்ளது.

இந்த முயற்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது இதுவரை நீங்கள் செலவளித்ததை நீங்கள் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இனி வர போகும் செலவை நாம் சேர்ந்து பார்த்து கொள்வோம். அதற்கு பதிலாக இப்படத்தின் தமிழக வெளியீடு உரிமை மற்றும் கலைஞர் டிவிக்கு சேட்டிலைட் உரிமை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தாராம் உதயநிதி.

தற்போது வெளியான தகவலின்படி, லைகா நிறுவனத்திடம் தற்போது போதிய வருமானம் இல்லையாம். அதன் காரணமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம், இந்தியன் 2 ஆகிய மூன்று படங்களின் சாட்டிலைட் உரிமையையும் கலைஞர் டிவிக்கு கொடுத்து விடுகிறோம். அதற்கான பணத்தை தாங்கள் கொடுத்து விடுங்கள். நாங்கள் அதனை வைத்து இங்கே இந்தியன் 2வை முடித்து விடுகிறோம். என்று தற்போது உதயநிதிக்கு லைகா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – நான் சொன்னா செய்வேன்.. ஆனால், அத மிஸ் பண்ணிட்டேன்.. அந்த வீடியோவை லீக் செய்த லோகேஷ்.!

இந்த கோரிக்கையை உதயநிதி ஸ்டாலின் ஏற்று ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தியன்2 தொடங்கும் சூழல் உருவாகும் என்று தற்போது கூறப்படுகிறது. ஏனென்றால் முன்பு போல லைகாவின் செல்போன் சேவை நிறுவனம் சரியான வருமானம் தருவதில்லையாம். அதன் காரணமாகத்தான் தற்போது அந்த நிறுவனத்திடம் போதிய வருமானம் இல்லாத காரணத்தால், உதயநிதியிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளதாம் லைகா.

Published by
Manikandan

Recent Posts