இந்தியன் 2-தான் போச்சி!. வேட்டையனுமா?!.. இயக்குனர் மீது செம கடுப்பில் இருக்கும் லைக்கா!...

by சிவா |
indian
X

Vettaiyan: கடந்த சில மாதங்களாகவே லைக்காவுக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரன் லண்டனில் தொழிலதிபராக இருப்பவர். சினிமா எடுக்கும் ஆசையில் கோலிவுட்டுக்கு வந்து லைக்கா எனும் நிறுவனத்தை துவங்கினார். முதல் படமே விஜயை வைத்து கத்தி எடுத்தார்.

அதன்பின்னரும் பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே எடுத்தார். எனவே, ரஜினி, விஜய், கமல் போன்ற பெரிய நடிகர்களின் பார்வை லைக்கா பக்கம் திரும்பியது. ஏனெனில் 100 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே முடியும். ரஜினி, விஜய் ஆகியோரை வைத்து படங்களை எடுத்தது லைக்கா நிறுவனம்.

இதையும் படிங்க: பார்த்திபன் இப்படி ஏமாத்துவாருன்னு எதிர்பாக்கவே இல்ல!. புலம்பும் இமான்!..

எவ்வளவு பெரிய நிறுவனம் என்றாலும் ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை எடுத்தால் திணறிவிடும். அப்படித்தான் விடாமுயற்சி, இந்தியன் 2, வேட்டையன் என 3 பெரிய படங்களை தயாரித்தது லைக்கா. எனவே, பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே நின்று போனது. இந்தியன் 2 படம் கூட உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பணம் போட்டதால் எடுக்க முடிந்தது.

இப்போது இந்தியன் 2 வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லாததால் எதிர்பார்த்த வசூல் இல்லை. தியேட்டர்கள் காத்து வாங்கி கொண்டிருக்கிறது. இதுவே லைக்காவை அப்செட் ஆக்கியுள்ள நிலையில் வேட்டையன் படம் மூலம் புதிய தலைவலி வந்திருக்கிறது.

இதையும் படிங்க: வெற்றி வசந்த் பெயரில் மோசடியா? சின்னத்திரை விஜய்சேதுபதியே கடுப்பாகி போட்ட வீடியோ!..

இதுவரை 15 செட்யூல் வரை படப்பிடிப்பு நடந்தும் படப்பிடிப்பு முடியவில்லை. படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போகிறது. ‘ஷூட்டிங்கை முடித்து என்னை அனுப்பிவிடுங்கள்’ என ரஜினியே சொல்லும் அளவுக்கு போக அவரின் காட்சிகளை முடித்து அனுப்பிவிட்ட இயக்குனர் ஞானவேல் இப்போது மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறாராம். 15 செட்யூல்கள் முடிந்த பின்னரும் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என சொல்ல லைக்கா நிறுவனம் கடுப்பாகி இருக்கிறது.

மேலும், அந்த 20 நாட்கள் படப்பிடிப்பு எங்கு நடத்த வேண்டும் என இன்னமும் அவர் திட்டமிடவில்லையாம். ஏற்கனவே இந்தியன் 2 வசூல் இல்லாத அப்செட்டில் இருக்கும் லைக்கா அந்த கோபத்தை வேட்டையன் பட இயக்குனர் மீது காட்ட துவங்கி இருக்கிறார்களாம்.

Next Story