இந்த சப்ஜெக்ட்டுக்கு உயிர் இருக்கு!.. வேட்டையன் அப்டேட் சொன்ன லைக்கா!….

Published on: August 18, 2024
vettayan
---Advertisement---

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். வயதானாலும் சிங்கம் சிங்கம்தான் என சொல்வது போல 70 வயதிலும் ஜெயிலர் எனும் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுத்திருக்கிறார் ரஜினி.

ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினியை மீண்டும் பிஸியான நடிகராக மாற்றியிருக்கிறது. மகளின் இயக்கத்தில் லால் சலாம், லைக்கா தயாரிக்க ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என படங்களை புக் செய்தார். மேலும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. லால் சலாம் படம் வெளியாகி ரசிகர்களை கவராமல் போனது. அதன்பின் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவனந்தபுரம், கன்னியாகுமாரி, நாகர் கோவில்,ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடந்தது.

vettayan

இந்த படத்தில் ரஜினியுடன் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர் பஹத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, நடிகை ரித்திகா சிங், துஷரா விஜயன், மஞ்சு வாரியர் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியானதோடு சரி. அதன்பின் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. அதோடு, ரசிகர்களும் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தை பற்றியே பேசி வருகிறார்கள். கூலி படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

எனவே, வேட்டையன் படத்தையே ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இல்லை. இந்நிலையில்தான், வேட்டையன் படம் தொடர்பான முக்கிய அப்டேட் நாளை அதாவது 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.