அதர்வாவுக்கு “நோ” சொல்லும் லைக்கா… அடம்பிடிக்கும் ரஜினி மகள்… ஒரு முடிவுக்கு வாங்கப்பா!!
“பாணா காத்தாடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய அதர்வா, அதன் பின் “முப்பொழுதும் உன் கற்பனைகள்”, “பரதேசி”, “சண்டி வீரன்”, “ஈட்டி” போன்ற வெற்றித் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.
எனினும் இத்திரைப்படங்களுக்குப் பிறகு அதர்வா நடித்த எந்த திரைப்படமும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த “குருதி ஆட்டம்”, “டிரிக்கர்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை சோதித்தது. இவ்வாறு தொடர்ந்து அதர்வா நடித்து வரும் திரைப்படங்கள் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதர்வாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் அத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் லைக்கா நிறுவனம் அதர்வாவை கதாநாயகனாக வைத்து தயாரிக்க தயக்கம் காட்டி வருகிறதாம்.
அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை என்பதால் அவர் நடிக்கும் திரைப்படம் வியாபாரம் ஆகாது என லைக்கா யோசித்து வருகிறதாம்.
ஆனால் ஒரு பக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தான் இயக்கும் திரைப்படத்திற்கு அதர்வாதான் பொருத்தமாக இருப்பார் எனவும் ஆதலால் அதர்வாவை வைத்துத்தான் திரைப்படத்தை இயக்க வேண்டும் எனவும் ஒற்றை காலில் நிற்கிறாராம்.
இதனால் லைக்கா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இத்திரைப்படத்திற்காக அதர்வா அதிக சம்பளம் கேட்கிறார் என ஒரு தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.